ஆர் வத்ஸலா/நல்லாசிரியர்

குழந்தையின் கை பிடித்து நடை பழக்கும் தாயைப் போல்
என்னை பயிற்றுவித்தனர்

தவறுக்கு தண்டனை தந்து பயமுறுத்தாமல்
மெல்லிய குரலில்
“நீ இப்படி செய்யலாமா?”
எனும் கேள்வியால் என்னை

வெட்கித் தலை குனிய வைத்து திருத்தினார்கள்

அவர்களின் அன்பில் தோய்ந்திருந்த

ஒவ்வொரு பாடமும் நமது நெஞ்சத்தில்
கல் வெட்டாகின

நெஞ்சு வேகும் போதும்
சுடர் விடும்
என்னுள்ளிருந்து
என் நல்லாசிரியர்களுக்கான
எனது நன்றி