நாடோடி / 1000 நீதி கதைகள்

ஒரு மந்திரி

முன்னொரு காலத்தில் ஈட்டிகள் தயார் செய்யும் வியாபாரிகள் இருந்தார்கள். அவர்கள் அந்த ஊர் அரசனுக்கு விற்பது வழக்கம். ஆனால் ஈட்டிகள் வாங்கும் முன் அரசன் மந்திரியைக் கொண்டு ஈட்டிகளைப் பரிசோதனை செய்யச் சொல்வான். மந்திரி சிபாரிசு செய்தால்தான் வாங்குவான். இல்லாவிடில் வாங்க மாட்டான்.
இதைப் பயன்படுத்திக் கொண்டு மந்திரி அந்த வியாபாரிகளிடமிருந்து நிறைய லஞ்சம் வாங்கி வந்தார். லஞ்சம் கொடுத்தவர்களின் ஈட்டிகள்தான் நன்றாக கூர்மையாக இருக்கிறது என்று சொல்வார். மற்றவர்களின் ஈட்டிகள் நன்நாயில்லை யென்று சொல்வார்.
ஒரு வியாபாரிக்கு மந்திரிக்கு லஞ்சம் கொடுக்கப் பிடிக்கவில்லை. எஞ்த வழக்கத்தை ஒழிக்க வேண்டுமென்று அவர் தீர்மானித்தார். அதற்கு ஒரு யுக்த செய்தார்.
தான் செய்த ஒரு ஈட்டியின் மீது மிளகாய்ப் பொடியைத் தடவி வைத்தார். மந்திரி ஈட்டியை உறையிலிருந்து எடுத்து முகர்ந்து பார்த்துத்தான் அது நல்ல எஃகினால் செய்யப்பட்டதா, அல்லது சாதாரண இரும்பினால் செய்யப்பட்டதா என்று கண்டுபிடிப்பார்.
ஆகவே அன்று அவர் அந்த வியாபாரியின் ஈட்டியை உறையிலிருந்து எடுத்து முகர ஆரம்பித்ததும் தும்ம ஆரம்பித்தார். அதனால் ஈட்டி அவர் மூக்கை அறுத்து விட்டது.
அதற்குப் பிறகும் அவர் அது நல்ல ஈட்டி இல்லை, அது கூர்மையாக இல்லை யென்று சொல்ல முடியுமா? ஆகவே அதை வாங்கிக் கொள்ளும்படி அரசனுக்குச் சிபாரிசு செய்தார்.