மா.தக்ஷிணாமூர்த்தி/திரை

வேலைக்காரியும் அப்படியே.
அடியில் அழுக்குப் பாவாடை.
மேலே நல்ல புடவை.
காலையில் வந்ததும்
சேலையை அவிழ்த்துவைத்து
வேலை செய்வாள்.
மாலையில்
வேலை முடிந்ததும்
சேலை கட்டிக்
காண்பவர் கண் கவர்ந்து வீடுசேர்வள்.
ஆனால் அந்த அழுக்குப் பாவாடையும்
என் கண்ணைக் கவரவில்லையா?