
திருவடிப் புகழ்ச்சி
திரு ஆயிரம்
பரசிவ வணக்கம்
திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்கச்
சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
திருக்கூத்து விளங்க ஒளி சிறந்த திருவிளக்கே
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
உலகமெலாம் விளங்க அருளுதவுபெருந்தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்து ஒருபால் விளங்க
வயங்குமணிப் பொதுவிளங்க
வளர்ந்தசிவக் கொழுந்தே.
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே
அன்புரு வாம்பர சிவமே.
அன்பெனும் கரத்தமர் அமுதே
பரசிவம்: சின்மயம் பூரணம் சிவபோக
பாக்கியம் பரம நிதியம்
பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப்
பரம ஏகாந்த நிலையம்
பரமஞானம் பரவ சத்துவ மகத்துவம்
பரம கைவல்ய நிமலம்
பரமதத்துவ நிரதிசய நிட்களம் பூத
பௌதிகா தார நிபுணம்.
பவபந்த நிக்ரக ‘வினோத சகளஞ்
சிற்பரம் பரானந்த சொரூபம்
பரிசயா தீதம் சுயம் சதோதயம் வரம்
பரமார்த்த முக்த மௌனம்
படன வேதாந் தாந்த மாகமாந் தாந்த நிரு
பாதிகம் பரம சாந்தம்
பரநாத தத்துவாந்தம் சகச தரிசனம்
பகிரங்கம் அந்த ரங்கம்
பரவியோமம் பரம ஜோதிமயம் விபுலம்
பரம்பரம் அனந்தம் அசலம்
பரமலோகாதிக்க நித்திய சாம்பி ராச்சியம்
பரபதம் பரம சூக்ஷ்மம்
பராபர மநாமயம் நிராதர மகோசரம்
பரம தந்திரம் விசித்திரம்
பராமுத நிராகரம் விகாசனம் விகோடணம்
பரசுகோ தயம் அக்ஷயம்
பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம்
பதித்துவ பரோ பரீணம்
பஞ்சகிர்த்திய சுத்த கர்த்தத்துவம் தற்
பரம் சிதம்பர விலாசம்
பகர் சுபாவம் புனித மதுலமது லிதமம்
பராம்பர நிரா லம்பனம்
பரவு சாக்ஷாத்கார நிரவயவங் கற்
பனாதீத நிரு விகாரம்
பரதுரிய அனுபவம் குருதுரிய பதமம்
பகம் பகா தீதவிமலம்
பரம கருணாம்பரம் தற்பதம்கன. சொற்
பதாதீதம் இன்ப வடிவம்
பரோக்ஷ ஞானாதீதம் அபரோக்ஷ ஞானானு
பவ விலாசப் பிரகாசம்
பாவனா தீதங் குணாதீதம் உபசாந்த
பத மகா மெளன ரூபம்
பரம போதம் போத ரகித சகிதம் சம்
பவாதீதம் அப்ர மேயம்
பகரனந் தானந்தம் அமலம் உசிதஞ் சிற்
பதம் சதானந்த சாரம்
பரையாதி கிரணாங்க சாங்க சௌபாங்க விம்
பாகார நிருவி கற்பம்
பரசுகா ரம்பம் பரம் பிரமவித்தம்
பரானந்த புரண போகம்
