சிறகு இரவி
**
ஐம்பதில் பிறந்த
பிள்ளைகளுக்கு ஏனோ
வெளியூர் பயணத்தில்
மட்டுமே காட்சிப்பொருள்
புகைவண்டியும் அதன்
நிறுத்துமிடமும்
கரி இஞ்சினின்
கடைசி துகள் பார்த்த
நினைவு எச்சம்
தலை நீட்டாதே
கரி கண்ணில் விழும்
எச்சரிக்கையுடன் ஒரு
லிக்னைட் பிரயாணம்
வந்திறங்கிய இடம்
கரியாக இருட்டாக
இருட்டில் எது கரி?
எது கண்ணில் விழும்.? விழாது! விழுந்தாலும்
இன்னும் கருப்பாகுமோ
பார்வையின் அவதானிப்பு?
நிலைய வித்வான்
சர் சர் என்று
ஆரோ அவரோகணிக்க
சூடான தேனீர்
குடிக்கும் ஆசை மட்டும்
அப்போதே நீராவியானது!
**

“ஐம்பதில் பிறந்த பிள்ளைகள்” என்கிறீர்கள். தகப்பனின் ஐம்பதாம் வயதில் பிறந்த பிள்ளைகள் நிச்சயம் அனுதாபத்துக்கு உரியவர்களே.