
புள்ளி என நினைத்தேன்.
முற்றும் எனப் போய் நின்று கொண்டது.
விரிசல் என நினைத்தேன்.
வேரறுத்தது.
விலகாதென நம்பினேன்.
விடைபெற்றுப் போனது.
இடைவெளியென கருதினேன்.
அகழியானது.
திரையென இருந்தேன்.
கண்ணாடிச் சுவராகி
கருங்கல் கோட்டையானது.
வெறும் சலனமென இருந்தேன்.
மௌனச் சமாதியானது.
கடைசிவரையான காப்பு என
இருந்தேன்.
கைவிட்டுப் போனது.
இனியெலாம் சுகமென்றானேன்.
இன்றிறுதியென்றானது.
வெற்றூடலென்றிருந்தேன்.
பிரிவொன்றையே சந்தித்தேன்.
கண் பட்டுப்போனதோ இறைவா?
கண்ணாடிப்பேழை நொறுங்கியதே!
மரணத்தை விட
கனத்துக் கிடக்கிறதே
இந்த மௌனவலி!
–
