ஷண்முக சுப்பையா/காந்த முனைகள்

தந்தை தன் பாதியை
விட்டுச் சென்றார்
நான் என் பாதியை
கொண்டு வந்தேன்.
பாதியும் பாதியும்
கொஞ்சிக் குலாவிட
சமகாந்த முனைகளவை
எவ்விதம்
எதிர்காந்த முனைகளாய்
மாறின என்று நான்
எண்ணத்தில் ஆழுமுன்னே
அவை
சமகாந்த முனைகளாய் மாறினவே!
மாறியது மாறியதே.