
மதம், அரசியல் கருவி!
கிறித்துவ மதத்தை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்கும் ஒரு கருவியாய்ப் பயன்படுத்தினர் ஆங்கிலேயர். இந்தத் திருப்பணியில் வர்த்தக நோக்குடைய பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் கல்வித் துறையில் ‘தொண்டு’ புரிந்த லார்டு மெக்காலே போன்ற அறிஞர்கள், சமயத் தொண்டர்களான பாதிரிகள் ஆகிய ஆங்கிலேயர் எல்லோரும் ஒருமனத்துடன் முழு மூச்சுடன் ஈடுபட்டிருந்தனர்.
கிறித்துவப் பாதிரிமார்கள் இஸ்லாம் – இந்து மதங்களுக்கு எதிராக நடத்தி வந்த பிரச்சாரப் போருக்குத் துணை புரியும் பொருட்டு, “இந்தியர் யாரும் சொந்தத்தில் அச்சகம் நடத்தக் கூடாது” என்று தடை விதித்தது பிரிட்டிஷ் கம்பெனி. இந்தத் தடை 1835ஆம் ஆண்டு வரை அமுலில் இருந்தது. அச்சகத்தை நடத்தும் உரிமை ஆங்கிலேயருக்கு ஏகபோகமாயிருந்ததால், அச்சுப் பிரசுரங்களின் மூலம் தங்கள் சமய வளர்ச்சிக்குப் பாடு படும் வாய்ப்பு இந்திய மக்களுக்கு இல்லாமலிருந்தது. தாங்களே படைத்துக் கொண்ட இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இந்தியர்களைக் கிறித்துவர்களாக மாற்ற முயன்றனர் பாதிரிகள்.
‘கொழுப்போ கொழுப்பு!’
இந்த நேரத்தில் இராணுவத்தினரிடையே எரியும் தீயில் எண்ணெய் விட்டது போல் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதனை வீர சவர்க்கார், கீழ்வருமாறு வருணிக்கின்றார்.
“கொழுப்புத் தடவப்பட்ட புதிய தோட்டாக்களை இந்திய சிப்பாய்கள் உபயோகித்துத் தீர வேண்டும் என்று கட்டளைகள் பிறந்தன. புதிய தோட்டாக்களை அபரிமிதமாக உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகளும் பல்வேறு இடங்களில் திறக்கப்பட்டன. தோட்டாக்கள் மிருதுவாகவும் வழுவழுப் பாகவும் இருப்பதற்காக ஒருவிதக் கொழுப்பை உபயோகித்தனர். அக்கொழுப்பை ஏற்கெனவே கையால் அகற்றியது போல் அகற்றக் கூடாதென்றும், அதைப் பல்லால் கடித்து அகற்ற வேண்டுமென்றும் உத்தரவிட்டனர். எவ்விதம் பல்லால் கடித்து அதைச் சுலபமாக அகற்றலாமென்பதும் சிப்பாய்களுக்குக் கற்பிக்கப்பட்டது.
“அதிகாரிகள் தோட்டாக்களுக்கு ஆட்சேபகரமான கொழுப்பைத் தடவியதுடன் ‘மூடநம்பிக்கை காரணமாக அவைகளைக் கடிக்க மறுக்கும் சிப்பாய்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்’ என்றும் பயமுறுத்தினர்.”
(‘எரிமலை’)
இந்த நிகழ்ச்சி கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்தில் இருந்த இந்தியச் சிப்பாய்களிடையே மகத்தானதொரு ஆவேசத்தைக் கிளப்பி மத உணர்ச்சி கலந்த அரசியல் புரட்சிக்கு அடிகோலிக
விட்டது. அது காரணமாக வீறிட்டெழுந்த ‘சிப்பாய்ப் புரட்சி’ சுமார் ஓராண்டுக் காலம் பிஷாவர் முதல் கல்கத்தா வரை உள்ள பாரதத்தின் பெரும்பகுதியில் நடைபெற்றது. அதில் இந்து – முஸ்லிம்களான மன்னர்கள், இராணுவத் தளபதிகள், மௌல்விகள், புரோகிதர்கள், பொது மக்கள் ஆகிய அனைவருமே பங்கு கொண்டனர்.
அரசியார் பிரகடனம்
மக்களின் மத உணர்ச்சி புண்படுத்தப்பட்டதை உணர்ந்த பிரிட்டிஷ் சக்கரவர்த்தினியான விக்டோரியா ராணியார், புரட்சியை ஓடுக்கும் குறிக்கோளுடன் ஒரு பிரகடனம் வெளியிட்டார்.
அதில் “கிழக்கிந்தியக் கம்பெனியால் கைப்பற்றப்பட்ட சமஸ்தானங்கள் போக எஞ்சியுள்ள சமஸ்தானங்களின் ‘சுதந்திர அந்தஸ்து’ அங்கீகரிக்கப்படும். பிரிட்டிஷ் ஆட்சி இந்திய மக்களின்
விஷயங்களில் தலையிடாது. கல்வி, திறமை, யோக்கியப் பொறுப்புள்ளவர்கள் யாராயினும் சாதி – மத வேற்றுமையின்றி அவர்களுக்கு உத்தியோகம் வழங்கப்படும்” என்று உத்தரவாதம் கொடுத்தார். இந்தப் பிரகடனத்துக்குப் பிறகு மதமும் அரசியலும் கலந்து நிகழ்ந்த ‘சுதந்திரப் புரட்சி’ பிசுபிசுத்து விட்டது.
1757ஆம் ஆண்டு முதல் 1857ஆம் ஆண்டு வரையுள்ள ஒரு நூற்றாண்டுக் காலத்தில் பாரத மக்கள் அரசுரிமையை இழந்ததோடு, மத உரிமைகளையும் இழக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு இரையாயினர். பிரிட்டிஷ் அரசியாரின் பிரகடனத்தால் பாரதத்தின் நிர்வாகம் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் இருந்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் கைக்கு மாறியது. அதனால் மதத் துறையில் இந்திய மக்களின் நிலைமை மாறியதென்றாலும், அரசியல் பொருளாதாரத் துறைகளில் அடிமைத்தனம் முன்னிலும் மோசமாக உறுதியடைந்தது.
மதத்தில் மறுமலர்ச்சி
தீமையில் விளைந்த நன்மை போலப் பாரதம் அரசியல் பொருளாதாரத் துறைகளிலே அடிமைப்பட்டதென்றாலும், அதன் விளைவாகவும் ஒரு ‘நன்மை’ ஏற்படத்தான் செய்தது. ஆம், மதத் துறையில் மறுமலர்ச்சி தோன்ற வழி பிறந்தது. இந்து மதத்திலுள்ள பழைய நம்பிக்கைகளுக்கு, பழக்கவழக்கங்களுக்கு ‘மூடநம்பிக்கைகள்’ எனப் பெயர் வைத்து அவற்றிற்கு எதிராகப் பிரச்சாரப் போர் நடத்தினர் கிறித்துவப் பாதிரிகள். அதனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எதிர்ப்பின்றி வளர்ந்த புரோகித மதம் எதிர்ப்பைக் கண்டு விட்டது.
சாதியால் – மதத்தால் ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களிடையே கிறித்துவப் பாதிரிகளின் பிரச்சாரம் உள்ளொளியை ஏற்படுத்தியது. பாதிரிகள் வெறும் மதப் பிரச்சாரத்தோடு நின்று விடாமல், தாழ்த்தப் பட்டுக் கிடந்த இந்து மக்களை அணுகி, அவர்கள்பால் அன்பு காட்டி, ஆக்க வழியிலும் தொண்டு புரிந்தனர். கல்வி, சுகாதாரம், குடியிருப்பு ஆகியவற்றில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவி புரிந்தனர். இதனால் சேரிகளிலும், குடிசைப் பிரதேசங்களிலும் பல நூற்றாண்டுகளாக சிறை வைக்கப் பட்டிருந்த இந்துக்களுள்
பலர் கிறித்துவ மதத்தில் சேரலாயினர். அவர்கள் எண்ணிக்கை கொஞ்சமன்று; சுமார் ஒரு கோடியாகும்.
இந்தியாவில் ஏற்பட்ட இந்த மாறுதல் இந்து மதத்திலுள்ள படித்தவர் சிலரிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்து மதத்தைப் புனருத்தாரணம் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது. இந்துக்களிடையே உள்ள தத்துவ பேதங்கள், மத பேதங்கள், சாதி பேதங்கள் காரணமாக இந்திய சமுதாயம் ஒற்றுமையின்றி சுக்கு நூறாக உடைபட்டுக் கிடப்பதை உணர்ந்தனர்.
1757 முதல் 1857 வரையுள்ள ஒரு நூற்றாண்டுக் காலத்திலேயே மத மாற்றம் அதிகரித்தது. அதன் விளைவாக, படித்த இந்துக்க ளிடையே மனமாற்றம் ஏற்படலானது. கிறித்துவ மதத்தின் வளர்ச்சியால் இந்து மதம் நலிவது பற்றியோ, அந்த மதத்தின் துணைகொண்டு காலூன்றிய பிரிட்டிஷ் ஆதிக்கம் இழைக்கும் இன்னல்கள் பற்றியோ சமுதாயத்தின் அடித்தளத்தில் இருந்த சாதாரண மக்கள் அதிகமாகக் கவலைப்படவில்லை. காரணம், . அவர்களெல்லாம் ஏற்கெனவே உள்நாட்டவராலேயே சுரண்டப் பட்டும் ஒடுக்கப்பட்டும் வந்ததுதான். இந்த நிலை சமுதாயத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த படித்த மக்களுள் சிலரையேனும் சிந்திக்க வைத்தது. உயர்தர நடுத்தர மக்களுள் சிலரிடையே தோன்றியிருந்த இந்தப் புத்துணர்ச்சி மகத்தானதொரு சமயப் புரட்சி நடத்தும் தலைவர்கள் தோன்றுவதற்கான சூழ்நிலை தோற்றுவித்தது. பின்னே தோன்றவிருந்த அரசியல் புரட்ச் சிக் கு முன்னோடியாகச் சமயப் புரட்சி ஏற்பட வேண்டுமென்பது தெய்வத்தின் திருவுள்ளம் போலும்!
இந்தச் சூழ்நிலைக்கு நீண்ட கால வரலாற்றுப் பின்னணியும் உண்டு. அதனை உருவாக்கிய பொறுப்பு, பாரதத்தின் மீது படையெடுத்த இஸ்லாமிய மன்னர்களுடையதும், இஸ்லாமியனுடையதுமாகும். அந்த வரலாற்றுப் பின்னணியை இங்கு சுருக்கமாகவேனும் கூறுவது அவசியமாகும்.
கஜினி பாதை
கி.பி.11ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானத்திலிருந்து பாரதத்தின் மீது முதன் முதலாகப் படையெடுத்தான் கஜினி மாமுது. அவன் தொடர்ந்து பதினேழு முறை பாரதத்தைத் தாக்கினான். அவற்றில் சோமநாதபுரப் படையெழுச்சி இந்தியக் கலாச் ராத்தின் மீது விழுந்த பயங்கரத் தாக்குதலாகும். சோமநாதரின் விக்கிரகத்தை உடைத்துப் பெரும்பொருள் திரட்டிக் கொண்டு நாட்டுக்குத் திரும்பிச் சென்றான் கஜினி மாமூது. இப்படிச் Iசெய்வது எல்லா மதங்களையும் சார்ந்த மன்னர் பெருமக்களின் புத்த (அ)நாகரிக’மாகும். ஆயினும் இஸ்லாமியனான கஜினி மாயுதின் வெறிச்செயல் இந்துக்கள் நிறைந்த பாரதத்தில் மத ரீதியான பெரும்போருக்கு வித்தாகி விட்டது.
பாரதத்தின் தெய்விகக் கலாச்சாரத்திற்கு கஜினி மாமூது தந்த அடி இந்து சமயவாதிகளை விழித்தெழச் செய்தது. கஜினி மாமுது காலம் தொடங்கி அடிக்கடி பாரதத்தின் மீது ஏற்பட்ட இஸ்லாமியரின் படையெடுப்புகள் பாரத மக்களின் அரசியல் உரிமைகளை மட்டுமல்லாமல் மத வழிப்பட்ட கலாச்சார உரிமைகளையும் தாக்குபவையாக இருந்தன.
மா.பொ.சி/வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
