
வேதத்தை உச்சாரணம் பண்ணுவது எப்படியோ அப்படித்தான் கேட்பதும். வேதம் ஓதினால் பலருக்குப் புரியாது . ஆனால் புரியாததைக் கேட்க வேண்டும் என்ற எண்ணமே ஏற்றம் .
அதர்வண வேதம் சொல்லும் : நீ கோவிலுக்குப் போய் சாமியைப் பார்ப்பே . ஆனால் சாமி உன்னைப் பார்க்க வேண்டாமா ? அவன் அனுக்கிரஹம் உனக்கு வேண்டாமா? அதற்கு அளவுகோல் எது ? வேத பாராயணம் நடக்கிற இடத்தில அமர்ந்து கேட்பது . ப்ரஹ்மச்சாரிபவதி பிக்ஷாந் தேஹி ‘ என்று பிக்ஷை கேட்கிறான் . அம்மா சாதம் கொண்டு வந்து போடுகிறாள். அவன் என்ன கேட்டான்னு அவளுக்குத் தெரியாம இருக்கலாம் . ஆனால் “ஏதோ குழந்தை வாசலில் பாத்திரத்தை வெச்சுண்டு கேட்கறான் . இருப்பதைப் போடுவோம் .நாம சாப்பிடறதுல ஒரு கிண்ணம் குறைஞ்சா தான் என்ன ?” ன்னு நினைக்கறா . இந்த ரசாயனம் அவளுக்குள் எப்படி ஏற்படுகிறது ? நமக்கு மிஞ்சியதை வேறொரு பசிக்கற வயத்துக்குக் கொடுக்கணும் என்கிற பண்பு அந்தச் சாதத்தைச் சாப்பிட்டதால் ஏற்பட்டது. சாதம் நல்ல மண்ணால் ஏற்றம் பெற்றது. எல்லா நல்ல விஷயமும் மண்ணுல கிடைக்கும் . உங்க இடத்துல மண்ணை வளர்க்கப் பாடுபடுங்கோ. சும்மா பெரிய படிப்பு படிச்சுட்டு அமெரிக்கால , லண்டன்ல ரெண்டு பெட் ரூம்ல AC யைப் போட்டுண்டு தூங்காதீங்கோ.
(ஒரு உபன்யாசத்தில் கேட்டது . தொகுப்பு ஸ்ரீதர் சாமா )

One Comment on “தொகுப்பு ஸ்ரீதர் சாமா/WORDS ARE ENERGY”
Comments are closed.