
- கி.பி. 1757 முதல் 1857 வரை
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதித் தொடக்கத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி முடிவு வரையுள்ள ஒரு நூற்றாண்டுக் காலத்தில் பாரதம் அந்நியர்களின் வேட்டைக்காடாக ளங்கியது. பிரிட்டிஷ் – பிரெஞ்சு – டச்சு – போர்ச்சுகீசு நாடுகளின் நாடோடி வர்த்தகக் கூட்டங்கள், தங்கள் சரக்குகளை விற்கும் சந்தைக் கடையாகப் பாரத நாட்டைப் பயன்படுத்தின. வாணிகத்தில் ஏற்பட்ட போட்டி – பொறாமை காரணமாக அந்த நாடோடிகள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்ட தோடு, உள்நாட்டு மன்னர்களிடையேயும் சண்டை மூட்டி விட்டுப் பாரதம் முழுவதையும் ‘குருக்ஷேத்திரம்’ ஆக்கினர்.
அரசுரிமை ‘ஏலம்!”
1767இல் வடக்கே வங்கத்தில் நடந்த ‘பிளாசிப் போர்’ தொடங்கி, 1887இல் வடபாரதம் முழுவதிலும் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சி வரையுள்ள ஒரு நூற்றாண்டுக் காலத்தில் சிறியவையும் பெரியவையுமாக எத்தனை எத்தனையோ பயங்கரப் போர்கள் தடைபெற்றன. அந்தப் போர்களிலே பாரத மன்னர்களின் தலைகளைப் பந்தாடினார்கள் பரங்கியர்கள்! அரியாசனத்தமர்ந்து அரசாளும் உரிமையையும் தங்கள் வர்த்தகச் சரக்காக்கி ‘ஏலத்’தில் விட்டார்கள்! இங்குமங்குமாகப் பரங்கியர்களை எதிர்த்துப் போர்ட்ட ஒரு சில சுதேச மன்னர்கள், தங்கள் சகோதர மன்னர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு அந்நியர்களால் மிகக் கொடுமையாகப் பழி வாங்கப்பட்டார்கள். இதற்குப் பாஞ்சாலங் குறிச்சி மன்னன் கட்டபொம்மன், சகோதர மன்னர்களான புதுக்கோட்டை எட்டயபுரம் அதிபர்களால் காட்டிக் கொடுக்கப் பட்டதைச் சான்றாகக் கொள்ளலாம்.
பாரதத்தில் புகுந்து, அதனை அடிமைப்படுத்த முயன்றவர்கள் பிரிட்டிஷ் – பிரெஞ்சு – டச்சு- போர்க்கீசு எனப் பல நாட்டினராயினும், அவர்களிடையே நடைபெற்ற போட்டி போராட்டங்களில் இறுதியாக வெற்றி பெற்றவர் பிரிட்டிஷாரே ஆவர். சில சின்னஞ் சிறு பகுதிகள் நீங்கலாக, பாரதம் முழுவதையும் பிரிட்டிஷார் கைப்பற்றிக் கொண்டனர்.
பாம்பின் வாய்த் தேரை தேரை
பாம்பின் வாய்ப்பட்ட தேரை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கப் படுவதுபோல ‘ஆங்கிலேயர் ஆதிக்கம்’ என்னும் மலைப்பாம்பின் வாய்ப்பட்ட பாரதம், கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கப்பட்டது. அதனை முற்றிலும் தன் வயிற்றுக்குள் கொண்டு செல்ல ஒரு நூற்றாண்டுக் காலம் பிடித்தது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஆம்; ஒரு நூற்றாண்டுக் காலம் தன் சுதந்திரத்துக்காகப் போராடிய பிறகே பிரிட்டிஷ் பேரரசுக்குப் பாரதம் அடிமைப்பட்டது. இது பாரத மக்கள் பெருமைப் படத்தக்க செய்தியாகும்.
1857இல் துவங்கிய சிப்பாய்ப் புரட்சி தோல்வியுற்ற பின்னர் பாரதம் முழுவதிலும் ‘சுடுகாட்டு அமைதி’ நிலவியது. அந்த அமைதி கால் நூற்றாண்டுக் காலம் நீடித்தது. அதன் பின்னரே சட்டரீதியான முறையில் காங்கிரஸ் மகாசபையின் மூலம் பாரதத்தில் தேசிய எழுச்சி தோன்றியது.
மத உணர்ச்சி
பாரதம் ஒரு நூற்றாண்டுக் காலம் போராடியதென்றால் அதற்கு முக்கியமான காரணம் பாரத மன்னர்களின் அரசியல் உணர்ச்சியை விட, மக்களின் மத உணர்ச்சியே ஆகும். பிரிட்டி ஷார் இந்தியாவுக்கு அந்நிய நாட்டினராக இருந்ததோடன்றி இந்து – முஸ்லிம் – சீக்கியர்களுக்கு அந்நிய மதத்தினராகவும் இருந்தனர். அதனால், “அந்நிய நாட்டினருக்கு அடிமைப்படுகிறோம்” என்பதிலிருந்த வெட்கத்தை விட “அந்நிய மதத்தினருக்கு அடிமைப்படுகிறோம்” என்ற வேதனையே ஒரு நூற்றாண்டுக் காலம் போராடுவதற்கான ஆற்றலைப் பாரத மக்களுக்குத் தந்தது. ஆம்; அன்றைய தேசியம் மதச் சார்புடையது. அதனால், பாரத மன்னர்களின் எதேச்சதிகாரக் கொடுமைகளுக்கு உட்பட்டிருந்த மக்கள் அரசுரிமை பறி போவதை விட, அந்நிய மதத்தினருக்கு அடிமைப் படுவதையே பெருத்த அவமானமாக, அநீதியாகக் கருதினர்.
இந்த உணர்வு காரணமாக – முஸ்லிம் – சீக்கிய மதங்களைச் சார்ந்த மக்களுள் மிகப் பெரும்பாலோர் ஒரே அணியில் நின்று போராடினர். இதனை 1857இல் நிகழ்ந்த ‘சுதந்திரப் பாட்சி’யின் வரலாறு புலப்படுத்தும்.
வத்திய
1767க்கும் 1857க்குமிடையிலுள்ள ஒரு நூற்றாண்டில் அரசியல் துறையிலேற்பட்ட மாறுதல் மதத் துறையிலும் மகத்தானதொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. அந்நாளில் மதம் வேறு, அரசியல் வேறு என்ற உணர்வு இந்திய மன்னர்களிடமோ , மக்களிடமோ இருக்கவில்லை. அதாவது ‘சமயச் சார்பற்ற அரசு’ என்ற சித்தாந்தம் நடைமுறையிலில்லை. அரசியலும் மதமும் பின்னிப் பிணைந்து கிடந்தன. கிழக்கிந்தியக் கம்பெனியாரின் அரசியலும் இதற்கு விலக்காக இல்லை.
மதமும் அரசியலும்
இந்தியாவில் அரசியல் ஆதிக்கம் பெற்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் தம்பெனியாரும் தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் கிறித்துவ மதத்தைப் பரப்ப முயன்றனர். ஏன்? இந்தியாவையே கிறித்துவ நாடாகவும் மாற்றி விடவும் திட்டமிட்டனர்.
பிரிட்டிஷார் பாரதத்தில் காலூன்றுவதற்கு முன்பு உள்நாட்டு மன்னர்கள், தத்தம் மதங்களைப் போற்றி வளர்த்தனர்; பிற மதங்களையும் மதித்து நடந்தனர்; மதாச்சாரியர்களைக் கௌரவித்து, அவர்களுடைய அறிவுரைகளைக் கேட்டு, அதன்படி
நடத்தினர்; அரசவையிலே சமயப் புலவர்கள் ‘ஆஸ்தானப் புலவர்களாக’ இருந்தனர். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் வருகையால் இந்த நிலைமை மாறியது.
புதிதாக உருவெடுத்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் அரசியல் ஆதிக்கம், கிறித்துவ மதத்தின் வளர்ச்சியைக் கருதியதால் உள்நாட்டு மதங்களை மதாச்சாரியர்களைப் புறக்கணித்து அவமதித்தது. இதனால் இந்து – முஸ்லிம் – சீக்கிய மதங் களைச் சார்ந்தவர்களிடையே வெறுப்பு வளர்ந்தது. அது நாளடைவில் கிறித்துவ ஆட்சிக்கு எதிரான வெறியாகவும் மாறியது.
‘கடவுள் சித்தம்!’
கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகிகள் சிலரும் இந்தியப் பாதிரிமார்கள் சிலரும் வெளியிட்ட கருத்துக்கள், இந்தியர்களிடையே வளர்ந்திருந்த வெறுப்பை அதிகரிக்கச் செய்தன.
“பரந்த இந்துஸ்தான சாம்ராஜ்யத்தைக் கடவுளே நம்மிடம் ஒப்புவித்துள்ளார். இந்தியாவின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை வரையில் கிறித்துவக் கொடி பறக்க வேண்டும் என்பதே அவரது கட்டளை. அது நிறைவேற ஒவ்வொரு ஆங்கிலேயனும் க் தன் முழுச்சக்தியையும் உபயோகிக்க வேண்டும். இந்தியாவை ஒரு கிறித்துவ நாடாகச் செய்யும் விஷயத்தில் அணு அளவும் தயக்கமோ, தாமதமோ கூடாது. ‘
(வீர சவர்க்காரின் ‘எரிமலை’)
இது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி டைரக்டர் போர்டின் தலைவர் மாங்கிள்ஸ் என்பார் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தாகும்.
கென்னடி என்ற ஓர் ஆங்கிலப் பாதிரியார் வெளியிட்ட கருத்து வருமாறு:
“நமக்கு எவ்விதக் கஷ்டமும் நேர்ந்தாலும் எவ்விதத் துரதிருஷ்டம் நேர்ந்தாலும் இந்தியாவில் நமது சாம்ராஜ்யம் இருந்து வரும் வரையில் அங்கு நமது முக்கியமான கடமை கிறித்துவ மதத்தைப் பரப்புவதுதான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. கன்னியாகுமரியிலிருந்து இமாசலப் பிரதேசம் வரையில் இந்துஸ்தானம் முழுவதும் இந்து – இஸ்லாம் மதங்களைக் கண்டித்து, எல்லோரும் கிறித்துவ மதத்தைத் தழுவச் செய்ய வேண்டும். அதுவரையில் நம் முயற்சிகளை நாம் இடை விடாது செய்து வர வேண்டும். அதற்காக நாம் எல்லாவித முறைகளையும் கையாள வேண்டும். நமக்குள்ள சக்தி முழுவதையும் உபயோகிக்க வேண்டும்.
இந்தியா கீழ்த் திசையிலேயே கிறித்துவ மதத்தின் ஒரு பிரம்மாண்டமான கோட்டையாகி விட வேண்டும் அதுவரையில் நமது முயற்சி சிறிதும் தளரக் கூடாது நாம் விடாமுயற்சியுடன் இருந்து வருவோமானால் இறுதியில் கடவுள் நமக்கு வெற்றியைக் கொடுத்தே திருவார். (‘எரிமலை’)
ஆங்கிலமும் அதற்கே!
“ஆங்கிலக் கல்வியால் நமக்குப் பல நன்மைகள் ஏற்பட்டன” என்று ஓயாது இன்றும் கூறப்படுகிறது. அந்தக் உல்வி முறையின் கர்த்தா லார்டு மெக்காலே ஆவார். அவர்,
“நமது கல்வித் திட்டமானது வழுவின்றிப் பின்பற்றப்படும் பட்சத்தில் இன்னும் முப்பதாண்டுக் காலத்துக்குள் வங்காளத்தில் ஓர் இந்துவோ அல்லது முஸ்லிமோ இருக்க மாட்டான் என்பது என் உறுதியான நம்பிக்கை.”
(‘எரிமலை’)
என்று 1886ஆம் ஆண்டில் வங்காளத்தில் முதன் முதலாக ஆங்கிலக் கல்வி முறை ஆரம்பமானபோது கூறினார்.
மெக்காலே மிகுந்த எச்சரிக்கையுடன் “இந்தியர்களெல்லாம் ஆங்கிலக் கல்வி முறையால் கிறித்துவர்களாக்கப்படுவார்கள்” என்று சொல்லாமல், ‘இந்துவோ அல்லது முஸ்லிமோ இருக்க மாட்டான்’ என்று கூறினார். ஆம்; ஆங்கிலக் கல்வி, மதத்
துறையில் ‘இரண்டுங்கெட்டான்களைச் சிருஷ்டிக்கும்’ என்றார். இன்று நாம் காணும் காட்சி அதுதானே!
(இன்னும் வரும்)
ய

One Comment on “மா.பொ.சி/வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு”
Comments are closed.