மதுவந்தி/பாரதி-103

நூறாண்டு தாண்டியும்
கொண்டாடி மகிழ்ந்து
திளைக்கிற மகாகவியின்
தினமிது.

சிந்தனை, சொல், செயல்
அனைத்தும் ஒன்றேயாக,
நவகவிதை செய்து
வழிகாட்டிய பாரதியின் தினம்.

எனக்கென்று சொல்லாமல்
நமக்குத் தொழில் எழுத்தெனச்
சொன்ன பாரதி.

பாதகம் செய்பவரைக் கண்டு
பயம் கொள்ளலாகதெனச்
சொன்ன பாரதி.

காகிதத்தையும் ஆயுதமாக்கும்
அக்கினிக் குஞ்சுக்
கவிதையெழுதிய பாரதி.

நாட்டிற்குழைக்கவும்
இமைப்பொழுதும் சோராதிருக்கவும்
சொன்ன பாரதியின் தினம்
கொண்டாடிக் கொண்டாடிப்
போற்றுவோம் மகாகவியை.