ம.சக்திவேலாயுதம்/பாரதி…யார்?

விடுதலைக்கு வித்திட்ட
என் விடுதலைக்
கவியைப் பார்த்து…

அந்நியனை தன் கவிதைகளால்
விரட்டிய
எம் தமிழ் கவியைப் பார்த்து..

சாதிகள் இல்லையடி பாப்பா
என்று பாடிய
எம் பொதுக்கவியைப் பார்த்து…

அச்சமில்லை..அச்சமில்லை
என்று அச்சத்தை போக்கிய
எம் வீரக் கவிஞனைப் பார்த்து

அறியாமை விளிம்பில்
நின்று கொண்டு
7 வயது குழந்தைக்கேட்டது
பாரதி…யார்? என்று…?