அனங்கன்/போக்கற்ற(டிரெண்டிங்)பாரதி

ஒற்றுப்பிழைமிகுந்த கவித்துவத்தோடு
இருக்கிறது எனது
கவிதை…கவித்துவம் என்று
சொல்லிக்கொள்வது ஒரு தற்புகழ்ச்சிதான்.

என்னசெய்ய பாரதி இன்று உனநினைவுநாள்..
.கவிஞனென்று சொல்லிக்கொள்பவனெல்லாம்
உன்னைப்பற்றி எழுதித்தானே ஆகவேண்டும்.

ஆண்டுக்கொருமுறை வருகிறது
அதனாலென்ன என்று விட்டுவிடமுடியுமா…
புழுதியில்
எறிந்தவீணையை ஆண்டுக்கொருமுறை
துடைப்பதில் இருக்கிறது எங்களது தமிழ்ப் பற்று.

உனது சுடர்மிகும் அறிவைக்கொண்டு….
தமிழனின் மனஇருளை ஓட்டுவதாய்
மேடைகளில் முழங்கிக்கொண்டிருக்கிறோம்..
உன்னைவிட்டால் வேறு ஏது நாதி.

நல்லவேளை நீ இன்றிருந்தால்
உனது பாவக்கணக்கை நவீனப்போக்கில்(டிரெண்டிங்)
அலசியிருப்பார்கள்.

யானைதள்ளியதும்…நீ வறுமையில் வாடியதும்
முற்பிறப்பின் பயனின்றி வேறு
என்ன…அந்தக் கவித்துவம்…
அதுவும் தானய்யா…

சிந்தனைசிறைஉடைக்க…
இன்னும் எத்தனை பாரதிவேண்டுமோ…?