ஆர் வத்ஸலா/பாரதியை விட்டு விடு

என் மீது அக்கறை காட்டினாய்
அன்பு காட்டினாய்
பாரதியின் காதல் கவிதைகள் பொழிந்தன
ஊற்றாய்
உன் அழகு அதரங்களிலிருந்து

உனக்கு வேண்டியவளை
நிரந்தரமாக கட்டிப் போட
நீ பயன்படுத்தும் ஆயுதம் அது
என்று அறியவில்லை நான்
இன்னொருத்தி வரும் வரை

பெண்களை மயக்காதே என்கிற
பயனற்ற வேண்டுகோளை
நான் விடுக்க மாட்டேன்
கெஞ்சி கேட்கிறேன்
தயை கூர்ந்து
என் பாரதியை விட்டு விடப்பா!