
-.
இச்செகத்தில்
உள்ளவர்கள்
எதிர்த்து நின்றபோதிலும்
உச்சி சென்று
கொடிய நட்ட
உன்மத்த மகிழ்வின்போது
தொடையை பார்க்கும்
துயரத்திற்கு.
இப்பொழுது
என்ன செய்யலாம்
பாரதி…
துச்சமாக
தூரு செய்தபோதிலும்
எச்சமென
ஏறி மிதித்து வென்ற போதும்
துகிலுரிக்கும்
வேதனைக்கு
இப்பொழுது
என்ன செய்யலாம்
பாரதி…
பிச்சையெடுக்காத பெரு வாழ்விற்கு
புத்தகமெடுத்த போதிலும்
கற்பிப்பவனே
காமூகனாய் மாறியதற்கு.
இப்பொழுது
என்ன செய்யலாம்
பாரதி…
ஓடி விளையாடும்
பொழுதெல்லாம்
அவர்கள்
நாடி நரம்பெல்லாம்
முறுக்கேறுதே
நாசம் செய்ய.
இப்பொழுது
என்ன செய்யலாம்
பாரதி…
கச்சை கட்டிய
மாந்தரெல்லாம்
கவுன்கள் போட்ட பின்பும்
கல்லப் பார்வை
மாறலையே.
இப்பொழுது
என்ன செய்யலாம்
பாரதி…
நரை கூடி
கிழப் பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கு
மாயும்
கிழவன் மடி
பேத்திக்கு
கீழாகுதே.
இப்பொழுது
என்ன செய்யலாம்
பாரதி…
வெந்து தணிந்து
வேதனையில்
உழலும் மனம்
தத்தரிகிட
தத்தரிகிட
தத்தரிகிட
தித்தோமென
கக்குமனல்
இவர்களை
சுட்டெரிக்கவில்லையே.
இப்பொழுது
என்ன செய்யலாம்
பாரதி…
