நாகேந்திர பாரதி/சூழலும் சுழலும்

குளத்தில் மூழ்கிய கல்லாக
மூழ்கிப் போனான்
முண்டாசுக் கவிஞன்
வறுமைச் சூழலாய்

விழுந்த கல் அதிர்வு
விரிந்து விரிந்து
கரையைத் தாண்டி
கவிதைச் சுழலாய்