நாகேந்திர பாரதி/ஒற்றைச் செருப்பு

கலவர அவசரத்தில்
கழன்று விழுந்ததா

ஓடும் பஸ்ஸில்
உதறி விழுந்ததா

வேண்டாம் என்று
விட்டு எறிந்ததா

கொஞ்ச தூரத்தில்
ஜோடி கிடக்குமென

எடுத்துப் போகிறான்
ஏழை ஒருவன்

One Comment on “நாகேந்திர பாரதி/ஒற்றைச் செருப்பு”

Comments are closed.