ஞானக்கூத்தன்
வண்டி புறப்பட நேரம், இருக்கிறது
இரயில் நிலையத்துக் கடிகாரத்தின் பெரியமுள்
திடுக்கிட்டுத் திடுக்கிட்டு நகர்கிறது
பிறந்தகம் போகும் புதுமணப் பெண்ணுக்கு
ஆரஞ்சு தோலுரித்துத் தருகிறான் மாப்பிள்ளை
தொட்டுக் கொள்கிற துவையல் பற்றாமல்
எஞ்சிய இட்லியோடு ஒருவன் ஓடுகிறான்
பெட்டிகள் வராத தண்டவாளத்தின்மேல்
நிலைய விளக்குகள் ப்ரகாசிக்கின்றன
திடுக்கிட்டுத் திடுக்கிட்டு நகர்ந்த முள்
ரெயிலின் புறப்பாட்டு நேரத்தைத் தொட்டது
சென்ட்ரல் ஸ்டேஷன் ரயில் நிலையத்தில்
சிந்திய எனது கண்ணீர் உன்னை மறைக்கிறது
இரயிலின் கடைசிப் பெட்டியின் பின்புறம்போல்
சோகம் தருவது உலகில் வேறேது?

“இரயிலின் கடைசிப் பெட்டியின் பின்புறம்போல்
சோகம் தருவது உலகில் வேறேது?”
என்ன அற்புதமான வரிகள்! ஞானக்கூத்தனுக்கு இணை ஞானக்கூத்தனே!