
நந்தி கலம்பகம்
(நகைச்சுவை)
பல்லவர் கி.பி.3-9 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்டனர். இவர்கள்
தமிழ்மொழியை வளர்த்து தமிழ்மொழியை ஆதரித்தனர். தமிழை வளர்த்த பல்லவ
அரசர்களின் 3- ஆம் நந்திவர்மன் குறிப்பிடத்தக்கவன். மூன்றாம் நந்திவர்மன்
மீது பாடப்பட்டதே `நந்திக் கலம்பகம்’ ஆகும். இந்நூல், மற்ற கலம்பக
நூற்களைப் போலல்லாமல் வரலாற்று நூலாகவே திகழ்கின்றது.
உள்ளதை உள்ளவாறு கூறுவது வரலாறு. உள்ளதை உயர்த்திக் கூறுவது இலக்கியம்.
மூன்றாம் நந்திவர்மனது அரசியல் தொடர்பான செய்திகள் நந்திக் கலம்பகத்தில்
அதிகமாகக் காணப்படுகிறது. இவ்விலக்கியத்தில் மூன்றாம் நந்திவர்மனின்
வரலாற்றுச் செய்திகளைப் புறத்துறைகள் வாயிலாகவும், தலைவி தன்
மகிழ்ச்சியைக் கூறுவதாக அமைந்து, அகப்பொருள் சுவையுடனு விளக்கப்படுகிறது.
மூன்றாம் நந்திவர்மனின் வரலாறு குறித்த கல்வெட்டு, செப்பேட்டு
செய்திகளும், நந்திக்கலம்பகத்தில் உள்ள செய்திகளும் ஒன்றோடு ஒன்று
இணைந்து காணப்படுகின்றன. மேலும் மூன்றாம் நந்திவர்மனின் கொடைச்சிறப்பு,
தமிழ்ப்பற்று, சிவபெருமான் மீது கொண்ட பக்தி, வீரம், அறிவு போன்ற
பண்புகளுடன் அறம், கொடை போன்ற பண்புகளும் நந்திக் கலம்பகத்தில் மிகவும்
போற்றப்படுகின்றன
அதிலிருந்து நகைச்சுவைஉணர்வு பாடல் ஒன்று
தமிழ் இலக்கியத்தில் மெல்லியதாக ஓடும் நகைச்சுவை உணர்வு நந்தி
கலம்பகத்திலும் காணக் கிடைக்கிறது.
நந்தியின் அரசவையில் பாடும் ஒரு பாடகன் (பாணன் என்று குறிப்பிடுவார்கள்).
அவன் காதலியின் ஊடலைப் போக்க இரவெல்லாம் அவள் வீட்டு வாசலில் நின்று பாடுகிறான்.
பின் அவள் அவனை கேலி செய்கிறாள்
“ஓ…நீ பாடினியா? எங்க அம்மா அது என்னவோ பேய் தான் அலறுகிறது என்றாள்,
அக்கம் பக்கத்தில் உள்ளவங்க எல்லாம் ஏதோ நரி ஊளையிடுகிறது என்றார்கள்,
என் தோழியோ நாய்தான் ஏதோ குறைக்கிறது என்றாள், அது எல்லாம் இருக்காது, நீ
தான் பாடி இருப்பேன்னு நான் சொன்னேன்…”என்று அவனை கிண்டல் பண்ணுகிறாள்.
அந்த நகைச்சுவை ததும்பும் பாடல்….
ஈட்டு புகழ்நந்தி பாண!நீ எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும் – காட்டிலழும்
பேயென்றாள் அன்னை பிறர்நரியென் றார்தோழி
நாயென்றாள் நீஎன்றேன் நா
