மா.தக்ஷிணாமூர்த்தி/ரசவாதம்

உன் தங்கநிறமேனி புகுந்தால்
இவன் தங்கமாகி விடுவான்.
என்ன ரசவாதமோ
உன் தழுவலில்?
செங்கோலும் உன்னரவணைப்பில்
அசைவற்றுக் கிடக்கின்றது.
உன் தோள்வலியும் வாள்வீச்சும்
கண்வீசும் கலையழகும் காட்டாயோ?
உன்மடி வருடி மடிய
ஆசையடி.