ஷண்முக சுப்பையா/எட்டுக் காலி

எட்டுக்காலி ஒன்று
தட்டின் மேலிருந்து
ஓடோடி வந்து
கட்டிலடி சென்று
பதுங்கிடுதல் கண்டேன்.
அப்படியாவென்று
அடுத்த அறை சென்று
விளக்குமாறு ஒன்று
எடுத்து வந்து பார்த்தால்
எங்குமதைக் காணோம்.