
வாயில் கவ்விய இறாலைத் தண்ணீரில் போட்டு விட்டு பூனை சொன்னது.
இன்று கொக்கிடமிருந்து காப்பாற்றி விட்டேன். நாளும் இப்படி நடக்க வாய்ப்பு இல்லை.
நன்றி என் அம்மா பேச்சை மீறி தண்ணீர் மேல் மட்டத்திற்கு வந்தது தவறு என்று உணர்ந்தேன் பூனை அண்ணா.
சரிதான் அவரவர்க்கு ஓர் இருப்பு ஆண்டவனால் வழங்கப்பட்டுள்ளது. அதை நாம் மறக்கக் கூடாது. அளவுக்கு மீறி உயர நினைத்தால் வாழ்வு முடிந்துவிடும். கவனமாக இரு.
நிச்சயமாக அண்ணா. நன்றி.
இரண்டும் போய்விட்டன.
நீர்ப்பரப்பு சலனமின்மைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.
