தொகுப்பு ஸ்ரீதர் சாமா /அருள் வெளியில் ஆயிரம் பாக்கள்

“காவ்ய கண்ட கணபதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருவருணை அபீதாம்பாள் சந்நிதியில் தாம் எழுதிய உமா சஹஸ்ரத்தை வெளியிட்டு உரை நிகழ்த்துவார்” என்ற அறிவிப்பு வெளியாகி அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு கூட்ட ஏற்பாடுகள் மும்முரமாய் நடந்தன. கணபதியோ 700 பாக்கள் வரை எழுதியவர் பின்னர் ஏனோ மறந்துவிட்டார். நாளைக் காலை 10 மணிக்கு நூல் வெளியாக வேண்டும். என்ன செய்வார்?
பகவான் ரமணரிடம் ஓடினார் . “ஏன் கவலை? இரவு ஆகாரம் முடித்து வாரும் . முடித்து விடலாம்.”
“என் மாமரக் குகைக்கு வர்றீங்களா பகவான்?”
“சரி “
குகையில் காவ்ய கண்ட கணபதியின் 4 சீடர்கள் தயாராகக் காத்திருந்தனர் . பகவான் நாயனா எதிரில் அமர்ந்து நாயனாவை உற்று நோக்க, த்யான வெளியில் பாக்கள் பொங்கிப்பாய , நாயனா சொல்ல , நான்கு சீடர்களும் எழுதிக் கொண்டனர் . நள்ளிரவிற்குள்ளேயே 1000 பாக்களும் தயார் . உமா சஹஸ்ரம் எழுதப்பட்ட கலியுக அதிசயம் இது.