
ஒஹோ எனக்கு
எல்லாமாயிற்று
ஆண்டவன் அருளால்
குழந்தைகளும்
இரண்டுண்டு
யார் செய்த புண்ணியமோ
இரண்டும் ஆண்களே
பின் என்ன ?
எனக்கு வாதம்
அவளுக்குக் காசம்
பாவம்
மூத்தவனுக்கு
ஏதோ பாலாரிஷ்டம்
இளையவனுக்கு
இதுவரைக்கும்
ஒன்றுமில்லை
இனி என்னவோ ?
எல்லாவற்றிற்கும் மேலாக
நான் ஓர் குமாஸ்தா
என்ன போதுமா
இல்லை இன்னும்
தெரிய வேண்டுமா.
