தி சந்தானம்
மெல்ல நகர்ந்து செல்லும் ரயிலின் பின்னால் சிகப்பு
மின்னியது
இலக்குகள் புரிந்த தீர்மானத்தை மெதுவாய் எனக்குச்
சொல்லியது
காற்றில் கலந்த குழலொலியும் காதில் வந்து பேசியது
அடைதலும் விலகலும் இயல்பென உணர்ந்து
கடப்பதில் தீவிரம் காட்டியது
வேகமெடுத்த ரயிலின் பின்புறச் சிகப்பும் தொலைவில்
ஓடியது
கணத்தினிலில் தனிமை மனதிலில் பற்றிட
தவிப்புகள் எனக்குள் எஞ்சியது
