திருப்பதி லட்டு/அழகியசிங்கர்

நான் எழுதிய
திருப்பதி லட்டு என்ற
கவிதை
மாயமாக மறைந்து விட்டது
போனில்

எனக்கு
லட்டு மீது இருந்த
பிரியம் இப்போது இல்லை
திருப்பதி கோயிலுக்குச்
சென்றால்
லட்டு வாங்கும் கூட்டத்தில்
இனிமேல்
நிற்க மாட்டேன்..

ஆனால்
லட்டு வாங்காமல்
திருப்பதி கோயிலுக்குச்
செல்வதும் என்னால் ஏற்க
முடியவில்லை