சி.சு.செல்லப்பா பிறந்த தின நிகழ்வை…

30.09.2021

வணக்கம்.


சி.சு.செல்லப்பா பிறந்த தின நிகழ்வை நடத்தி முடித்தோம்.


கடற்கரை மத்தவிலாச அங்கதம், கால சுப்பிரமணியன், பேராசிரியை செந்தமிழ் செல்வி, முத்துலட்சுமி என்றெல்லாம் நீண்ட நேரம் பேசி முடித்தோம்.


முன்னதாக மூத்த எழுத்தாளர் நரசய்யா, மூத்த கவிஞர் வைதீஸ்வரன் என்றெல்லாம் பேசினார்கள்.
சி.சு செல்லப்பா இன்னும் அச்சில்  கொண்டு வர வேண்டிய புத்தகங்கள் அதிகமாக இருக்கின்றன. 

நான் அவரைப் பார்க்கப் போகும்போது, என்னிடம் அவர் தருமு சிவராமுக்கு, வெங்கட் சாமிநாதனுக்கு எழுதிய பதில்கள் என்று ஒரு கத்தைத் தாள்களைக் காட்டுவார். ஒரு விதத்தில் அவற்றைப் புத்தகமாகக் கொண்டுவந்தால் சரியாக வருமா? இந்தக் காலத்திற்கு சி.சு. பதில்கள் எப்படிப் பொருந்தும் என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.


ஏற்கனவே ராமையாவின் சிறுகதைப் பாணி என்ற புத்தகம் ராமையாவின் முழுத் தொகுப்பு இல்லாமலேயே வெளி வந்துள்ளது.  

ராமையாவின் ஒவ்வொரு கதையாகச் சுருங்கிய வடிவில் குறிப்பிட்டு அத்தனையும் விமர்சித்துள்ளார்.  ஆனால் ராமையாவின் கதைகளை முழுவதும் படிக்க வாய்ப்பில்லை.


சி.சு செல்லப்பாவைப் பொறுத்தவரை அவருடைய விடா முயற்சி என்னைத் திகைக்க வைக்கிறது. 

One Comment on “சி.சு.செல்லப்பா பிறந்த தின நிகழ்வை…”

Comments are closed.