சுரேஷ் ராஜகோபாலன்
மத்தியான வேளை, தெருவில் எதோ ஒன்றிரண்டு வண்டிகள் போய் வந்தன.
வெயில் அடித்தது.
வீட்டுக்குள்ளே போய் பெரிய, மிகப் பெரிய அடுக்கு ஒன்றைக் கொடுத்துக் கலாய் பூசச்சொல்லி,
“எவ்வளவு பணம்?” என்று கேட்டாள்
ஒருவன் “பத்தணா” என்றான்.
இவள், “எட்டணா தான், வேலை சுத்தமாக இருக்கவேண்டும்” என்று பதிலுக்குக் காத்துக் கொண்டிருக்காமல் உள்ளே போனாள்.
குப்பன் சுப்பனிடன், “ம்ம் .. கிளம்பு நாம போகலாம்” என்றான்.
சுப்பன் அந்த அடுக்கை எடுத்துக்கொண்டு குப்பன் சைக்கிளில் பின்னால் அமர்ந்தான்
வண்டி மெதுவாகக் கிளம்பியது.
எதோ சந்தேகம் வந்தவளாக வெளியே வந்தாள் …
“டேய் நில்லுங்கடா. அந்த அடுக்க கொடுத்துட்டுப் போங்க.”
சுப்பன் திரும்பி அவளிடம், “எட்டணாவுக்கு வராது பத்தணா என்றால் கொடுக்கிறேன்,” என்றான் .
“இல்லை எட்டணாதான்,” என்றாள்.
இவர்கள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்கள் வெளியே வந்தார்கள்.
ஒருவர், “பெரிய அடுக்காக இருக்கிறதே இரண்டணா பார்க்காதே, பத்தணாக்கே வாங்கிகோயேம்மா….”
இவள், “ஐயோ அது என் அடுக்கு, கலாய் பூசக் கொடுத்தேன்…. தூக்கிட்டு போய்ட்டாங்களே,” என்று அழுதாள்.
இன்னொரு பெண் “இதென்ன அநியாயமா இருக்கிறதே, பட்டப் பகலில் இப்படியா ஏமாத்துவாங்க.”
வேறு ஒருவர், “சரியான கில்லாடியா இருக்கிறார்களே.”
அதற்குள்ளே குப்பனும் சுப்பனும் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டார்கள் …….
