அனங்கன்/நெய்மட்டுமா பொய்…?்்்்

உண்மைக்கருகில் எதுவுமில்லை என்றால்…பொய்யின் அலங்காரத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்…நாம் அப்படித்தான்
வாழப்பழகிக்கொண்டிருக்கிறோம்.

கடவுளைக்கூட அப்படித்தானென்றால்…அது நாத்திகவாதமாகிவிடும்.

பாலே உண்மையில்லை என்றாலும்…அந்த வெண்நுரையை அரசாங்க அங்கிகாரத்தோடு ஏற்றுக்கொள்கிறோம்.

எல்லா உணவுப்பொருள்களிலும் கலப்படம் இருக்கிறது…உணவுப்பாதுகாப்புத் துறையின் வரையறை எல்லையோடு…

ஏலஎல்லை விலைக்குள் என்றுமே தூய்மையான நெய்யை அடைய
முடியாது…

பரந்தாமனுக்குப் படைக்கப்படுவதெல்லாம்…அவனால் படைக்கப்பட்டதுதான்.
அவனுக்கு முன்னால் படைக்கப்படுவதுதான் புனிதமென்றால் அதுபாமரனுக்கு என்றுமே கிட்டாது.

புற்றுநோயால் சமூகமே அழிகிறது கலப்பட உணவுகளால்….அதைப்பற்றிக் கவலையில்லை…

மதப்புனிதமென்று நீங்கள் மனசாட்சிக்குத் திரைபோட்டுவிட்டு அரசியல்
செய்கிறீர்கள் அதிகாரத்திற்காக…

உண்மையாகக் கடவுளை நம்புவர்கள் சொல்லுங்கள்…
நெய்மட்டுமா பொய்…?


♦.