..

அரசியல்வாதி யெல்லாம் அமரிக்கா போகின்றான்! அன்றாடம் காய்ச்சிகளோ தெருத்தெருவாய்ப் போகின்றான்!
கோடியிலே மிதப்பவனோ கோவாக்கு போகின்றான்..
கோடிவீட்டு குப்புசாமி கோவில்குளம் போகின்றான்!
குளுகுளு வண்டியேறி
கொடுத்துவைத்தோன் போகின்றான்.. முன்பதிவில்லாப் பெட்டியிலே.. முட்டிமோதி யார்போவார்?
சுற்றிவந்தால் சுகம் என்று சுற்றுலா சிலர் போக.. பற்றுடனே.. வரவின்றி பாதையெங்கும் பசியோடு யாத்திரைகள் பலர்போவார்!
உற்சவமூர்த்தி யிங்கே
ஊர்கோலம் சாமிபோக..
ஊர்ஊராய் பணம்சேர்க்க ஆசாமிகள் அலைமோத..
கற்பனையல்ல இங்கே
சுற்றுலா போவதற்கும்
வழியின்றி வழித்தேடி.. வாழ்க்கையிலேக் கடந்துபோவார்.!
