ஒரு பேய்க் கதை

கதை : 48



அழகியசிங்கர் 

ஒரு மனிதன் காட்டு வழியாக ஒரு நகரத்திற்குக் கிளம்பிப் போய்க்கொண்டிருந்தான்.  தனியாகப் போகிறோமே யாராவது துணைக்கு வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான். அவன் புல்லாங்குழல் வாசிப்பவன்.  புல்லாங்குழல் வாசித்தபடியே காட்டிற்குப் போனான்.  அவன் இசையைக் கேட்டு யாராவது அவனுடன் சேர்ந்து வருவார்கள் என்று நினைத்தான். அவன் வாசிக்க வாசிக்க யாரும் அவனைப் பின் தொடரவில்லை.  ஆனால் வழியில் ஒரு புளியமரத்தின் மேல் குடியிருந்த ஒரு அழகான பெண் பேய் அவனைத் தொடர நினைத்தது. அவனை வழி மறித்தது.  இவ்வளவு அழகான பெண்ணை அந்த மனிதன் பார்த்ததில்லை. “உன் கூட வரலாமா?” என்றாள் அந்தப் பெண் பேய்.   “வா” என்றான். “உன் கூட துணைக்கு வருவேன்.  ஆனால் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டே வரவேண்டும்” என்றது பேய்.  “நீ என்னுடன் பேச முயற்சிக்கக் கூடாது.” . அவன் சரி என்று தலை ஆட்டினான்.. அவன்  தன்னை மறந்து புல்லாங்குழல் வாசித்துக்கொண்டே வந்தான்.  அடிக்கடி அந்த அழகான பெண் பேயைப் பார்த்தபடி வந்தான்.  

அவன் திடீரென்று வாசிப்பதை நிறுத்தி விட்டான். அந்தப் பெண் பேயை மட்டும் பார்த்தபடியே நின்றுவிட்டான். 

2 Comments on “ஒரு பேய்க் கதை”

  1. ‘ பெண் என்றால் பேயும் இரங்கும் ‘ என்பது பழைய மொழி. இங்கு பெண் பேய் என்றால் ஆணும் இரங்கும் என்று புது மொழி உருவாகும் படி அவன் இசையில் மயங்கிய பெண் பேயின் அழகில் மயங்கி அவன் இசையை மறந்து காதல் சொல்லும் கடைசி நேரம் , அவனுக்கு உயிர் வாழும் கடைசி நேரமாகவும் இருக்கலாம் .

Comments are closed.