தி.சோ.வேணுகோபாலன்/யோக ஏக்கம்

பால்பகுத்துக் காட்டும்
வெளிவேற்றுமையில்
நின்று
நினைவு
கண்வாயால் மேய –

”உள்ளே வாருங்களேன்”
விகற்பமற்ற குரல் –

என்னை ஒருகணத்தில்
அ-பாலனாக்கிய
நெருப்புப் பொறிச்சுடர்
நிரந்தரமாய்
என்னுள்…?

‘ஞானரதம்’ நவம்பர் 1973