
அந்தி பகலாய் ஊர்சுற்றி
அடைந்த பலன்கள் ஒன்றில்லை
பந்தி விரிந்த இடமெல்லாம்
பசிக்கு ஏற்ற உணவில்லை
சந்தி சிரிக்க வாழ்ந்தோனை
சரியாய்க் கண்டு அழைத்தீரே
சந்தி ரசேக ரபாரதியே
சரணம் சரணம் சரணமய்யா !
தன்னை வென்ற குருநாதா
தவத்தோன் சந்ர சேகரரே !
என்னுள் கோடி எண்ணங்கள்
என்னை வதைத்து வாட்டுகையில்
உன்னை எண்ணி ஓர்நிமிடம்
உள்ளே உன்தாள் பணிகின்றேன்
என்னைக் கொல்லும் கவலையெலாம்
எங்கோ பொசுங்கிப் போகிறதே! .
(இன்று(02.10.2024) சிருங்கேரி ஸ்ரீ சங்கராச்சார்யாள்
ஸ்ரீ சந்திர சேகர பாரதீ மகாஸ்வாமிகளின் ஆராதனை தினம்)
