
அவனிடம் நூறு வாழ்த்துச் சொற்கள் இருந்தன
எனக்கு ஆச்சர்யமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது
எல்லா வாழ்த்துச் சொற்களும் இங்கிதம் தெரிந்தவை
இடத்திற்கு தகுந்தது போல் தன்னை உருமாற்றிக் கொள்பவை.
எல்லோர் மனதையும் குளிரவைப்பவை .
இத்தனை வாழ்த்துச் சொற்களை வைத்துக் கொண்டு நீ என்ன செய்வாய் என்றேன்.
தட்டேந்தும் போது விழுகிற ஒவ்வொரு நாணயத்திற்கும் நான் அவற்றை விற்றுவிடுகிறேன் என்றான் .
விற்பனையான சொற்கள் வீடுவரை போய்ச் சேரட்டும்
தாராபுரம்
