
புதுப்புது பொம்மைகள் பாருங்க – இதில்
பொலியும் கலைநயம் ரசியுங்க
அதுக்கது துனையினைக் காணுங்க – முகம்
அன்பில் சிரிப்பதை உணருங்க
(வேறு)
மைனா குருவியும் கிளி,அணிலும் – கரு
மைபோல் காக்கையும் இருக்குங்க
சைனா பொம்மையே வேண்டாங்க – நம்ம
செந்தூர் முருகன வாங்குங்க
உயர்ந்த தியாகியின் உருவமுங்க – இது
உருகும் காதலர் சோடிங்க
வியர்வை சிந்துற இளைஞர்ங்க – இது
விண்ணில் பறக்குற விண்கலங்க.
உள்ளூர் மண்ணுல கைவைத்தே – எங்க
உசிரைப் பிசைந்திதைச் செஞ்சோங்க
அள்ளிக் கொண்டிதைச் செல்லுங்க – கொலு
அழகா இருக்குமே பாருங்க
மண்ணும் மரமுமே தேவைங்க – செயும்
வண்ணக் கலவையே சோறுங்க
கண்ணும் கருத்துமே தொழிலுங்க – அது
கடவுள் தந்தநல் வரமுங்க.
(இன்று 03.10.2024 நவராத்ரி முதல் நாள்)
