
மாணிக்க வாசகர் இலங்கை சென்று வந்ததைப் பற்றி சிவன் சார் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். தில்லை தீக்ஷிதர்களை மாந்தரீகம் மூலம் வெல்ல பௌத்த மதத்தினர் திட்டமிட்டனர்.தீக்ஷிதர்களை வென்றால் தென்னாடு முழுவதுமாக புத்த நாடாகிவிடும் என்று கணக்கிட்டனர்.
இலங்கையிலிருந்து பௌத்தர்கள் தீட்சிதர்களுக்கு சவால் விடுகையில் தீட்சிதர்கள் மாணிக்க வாசகர் உதவியை நாடினர். மணிவாசகரோ "நீங்கள் நெஞ்சார வணங்கும் நடராஜரை நாடுங்கள்" என்கிறார். நடராஜனோ "மாணிக்க வாசகரே, நீவீரே அதை நடத்தும்" என்கிறார்.
தீட்சிதர்கள் புத்த துறவிகளுடன் மாணிக்க வாசகரைப் பார்த்தனர். மணிவாசகர் "என்ன?" என்று கேட்டார். அவ்வளவு தான். புத்த கோஷ்டியின் பேசும் திறன் பறிபோனது. அவர்கள் கெஞ்சினர். "ஆளை விடப்பா. போட்டியெல்லாம் வேண்டாம். எங்களுக்குப் பேச்சு திரும்ப வந்தால் போதும்." என்பது போல் மணிவாசகரைப் பார்த்தனர். மணிவாசகர் அவர்களை மன்னித்தார்.
மேலும் இலங்கை சென்று இலங்கை அரசனை ஹிந்துவாக்கி அவனையும் அவன் குடும்பத்தையும் தில்லை அழைத்து வந்தார். மன்னரின் ஊமை மகள் நடராஜரைப் பார்த்த மறு நிமிடம் பேச ஆரம்பித்தாள்.
இலங்கை அரசன் நன்றிக்கடனாக ஒரு நடராஜர் கோவில் இலங்கையில் கட்டினான். தில்லையைப் போலவே பதஞ்சலி முனிவரும் புலிப்பாதரும் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டனர். இன்றும் ஆண்டு தோறும் அங்கே திருவிழா அமோகமாக நடக்கிறது.
