புகைவண்டி நிலையம்


ஆர் வத்ஸலா

அவன் அரக்க பறக்க
ஓடி வந்தான்
புகைவண்டி பெருமூச்சு விட்டபடிகிளம்பிக் கொண்டிருந்தது
அவன் இஷ்ட தெய்வத்திற்கு நன்றி சொல்லி
இலக்கை நெருங்கிய
ஓட்டப்பந்தய வீரரைப் போல
இன்னும் வேகமெடுத்து
வண்டியில் ஏறி
தன் இருக்கையை தேடி
அமர்ந்து கொண்டான்
அவன் நீட்டிய
பயண சீட்டை
பார்த்த
சிப்பந்தி
சொன்னார்
“தம்பி, இது நேற்றைக்கான டிக்கெட்”