
கொலுபாக்க வாங்கோ – எங்க
கொலுபாக்க வாங்கோ
கருவண்ண மேக ராமன்
தருமத்தைக் காக்க வேண்டி
பருவத்தில் காடு போன …. (கொலுபாக்க வாங்கோ)
தாய்தந்தை வார்த்தை ஏற்று
வாய்வார்த்தை கோபம் இன்றி
போய்வந்த கதையைச் சொல்லும் ..
(கொலுபாக்க வாங்கோ)
நம்பிவந்த உயிரை எல்லாம்
தம்பியாக ஏற்றுக் கொண்ட
எம்பிரானின் பண்பைக் காட்டும் ….
(கொலுபாக்க வாங்கோ)
ராவணனின் தீமை தீர்க்க
யாருடனும் நட்பு சேர்ந்த
ராமனது தர்மம் பேசும் ….
(கொலுபாக்க வாங்கோ)
பிறர்பொருளைத் துச்ச மென்று
அறநெறியில் வாழ்ந்து காட்டி
துறவுநிலை ராமன் போற்றும் ….
(கொலுபாக்க வாங்கோ)
அம்பினாலே பகைமை வென்று
அன்பினாலே அடிமை கொண்டு
என்றுமுள்ளே வாழும் ராமன் …..
(கொலுபாக்க வாங்கோ)
ராமனும பந்தம் போல
வேர்விடனும் என்று வேண்டி
ஊருடனே கூடி ஆடி …..
(கொலுபாக்க வாங்கோ)
(இன்று(04.10.2024) நவராத்ரி இரண்டாம் நாள் )
