ரவி அல்லது/ஆகர்ச மிளிர்வு


கோவித்துக்கொண்டு போன
எதுவும் வரவே இல்லை.
வருகின்ற எதுவும்
இணக்கமாக இல்லை.
இப்படியான
ஊசலாட்டத்தில்
வார்த்தையற்று
ஓய்ந்து போன
ஆயாச
தருணத்தை
மௌனமென
மட்டும்
சொல்லிவிட முடியாது.
*
-ரவி அல்லது.