மா.தக்ஷிணாமூர்த்தி/சுதந்திரப் பெண்டிர்

காலேஜக் கன்னியைக்
கைப்பிடித்துக்
கால்பிடித்து
இடையிலும் பிடித்து
விட்டேன்.
பிறகு
கைவிட்டேன்,
அல்லாது
இருபத்துநான்கு மணி நேரமும்
பிடித்துக்கொண்டே இருக்க
எவரால் இயலும்?
எனவே
கைவிட்டேன்.
மேலும்
இன்றைய பெண்டிர்
சுதந்திரம் வேண்டுவோர்.
எனவே
கொஞ்சநேரம் பிடித்துவிட்டுப் பின்
விட்டு விடுவதே
நல்லது.