ஒவ்வொரு குடும்பமாய்
நேரில் பார்த்துக்
கூப்பிடுகிறாள்
எங்கள் வீட்டில் கொலு
என்று
வாருங்கள் என்று
யாரும் உடனே வருவதில்லை
எல்லோருக்கும்
சிந்தனைகள்தான்
அதிகமாக இருக்கின்றன
யாரும் கொலு பார்க்க
எங்கள் வீட்டிற்கு
வரவில்லை
தூங்கப் போகும்போது
இன்று யாரும் வரவில்லை
என்று வருத்தப் படுகிறாள்
நானும்
வருத்தப் படுகிறேன்
கவிதைப் புத்தகம் கேட்டு
என்னிடம் யாரும்
வருவதே இல்லை என்று
