
மலர்ந்த செண்பகப்பூவை
கண்டு காதலுற்றது காற்று
முத்தமிட முனைகையில்
ஒடிந்து விழுந்தது பூ
பூ விழுந்ததில் அழகானது
அந்த கருங்கல் தரை.
காண பொறுக்காத காற்று
பாய்ந்தது அளளிக்கொள்ள.
குறுக்கே வந்த சின்ன பெண்
பூவை எடுத்து முகர்ந்தாள்
முகம் மலர தலையில்
வைத்துக்கொண்டாள்
சின்ன பெண்ணின்
மகிழ்வை கண்ட காற்று
மனமிளகி பிள்ளையிடம்
பூவை விட்டு விட்டு
மணத்தை மட்டும்
சுமந்தபடி போனது
