
தரிசித்துக்
கொண்டிருந்த
அம்மாவின்
கையை உதறி
கல்த் தூண் ஒன்றை சுற்றிச் சுற்றி
விளையாடுகையில்
எதிர்த்த தூணில் கண்பட்ட
இராவணன் சிலையை
சிறிது நேரம் உற்றுப் பார்த்தவள்
அதன் அருகில் சென்று
நேருக்கு நேர் நின்று கொண்டு
தனது இடது கையால் அவனது
பத்தாவது தலையும்
வலது கையால் முதல் தலையும்
அழுத்திப் பிடித்து
முகத்தின் அருகில் சென்று
பே….. பே ….பே….. என்று சொல்லி
பயம் காட்டி
யுகங்கள் தாண்டி
இன்னமும்
பழி தீர்க்க
முயலுகிறாள்
சிறுமி வடிவில் சீதை
–

செம