
தமிழில்: கௌரி கிருபானந்தன்
(11.10.2024 அன்று வெள்ளிக்கிழமை 100வது கூட்டம் விருட்சம் கதைஞர்கள் கூட்டம் நடத்த உள்ளோம். அதை ஒட்டி 100வது இதழ் விருட்சத்தில் (அச்சிதழில்) வெளிவந்த கதைகளை எடுத்துப் பேசுகிறோம்.)
ஆட்டோ நின்றது. என்ன? திடீரென்று நின்று விட்டாய்? அழுகை பொங்கி வருகிறதா? இது அழ வேண்டிய நேரமில்லை. தைரியமாக முன் நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டிய சமயம்.
"பஞ்ஜாரா ஹில்ஸ் போலீ¦ஸ் ஸ்டேஷன் இதுதான் அம்மா. நூற்றி இருபது ரூபாய்."
என்னது? அப்படி மலங்க மலங்க பார்க்கிறாய்? ஆட்டோக்காரனுக்கு பணம் கொடுத்து விட்டு நகர்.
காயம் பெரிசாக இருந்தால் அதன் தீவிரத்தை உடனே உணர முடியாது.
அப்பாடா! ஆட்டோக்காரன் போய்விட்டான். நீ என்ன? அங்கேயே நின்று விட்டாய்? திரும்பவும் என்னவாகி விட்டது? காவல் நிலையத்தைப் பார்த்தால் பயமாக இருக்கிறதா?
பட்டணத்தில் எந்தக் காவல் நிலையமாக இருந்தாலும் இப்படிதான் இருக்கும், திருமணம் முடிந்து முதல் முறையாக மாமியார் வீட்டிற்கு போவது போல்.
இத்தனை தூரம் எப்படியும் வந்து விட்டாய் இல்லையா? தைரியத்தை ¢வரவழித்துக்கொண்டு முன்னேறு. இன்னும் என்ன யோசனை? பயமாக இருக்கிறதா? இவ்வளவு தூரம் வந்த பிறகு பயப்படுவதால் பயன் இல்லை. என்ன தயங்குகிறாய்? போ என்றுதான் சொல்கிறேன் இல்லையா? பின் வாங்க வேண்டிய சமயம் இல்லை. சொ™ல௩சொ™ல எரிச்சல்தான் வருகிறது. முன் நெற்றியை கொஞ்சம் சரி செய்துவிட்டு, கண்களைத் துடைத்துக்கொண்டு போ! போ என்று சொல்கிறேன் இல்லையா.
அப்பாடா! எப்படியோ முன்னோக்கி அடி எடுத்து வைத்தாய்.
அந்த கான்ஸ்டபிளை பார். உன்னை எப்படி ஏறயிறங்கப் பா௱௧Aறா¡ என்று.
ஆண்கள் ரெட் லைட் ஏரியாவுக்கு போகும் அளவுக்கு பெண்கள் காவல் நிலையத்திற்கு வர மாட்டார்கள் என்ற திடமான நம்பிக்கையோ என்னவோ. அவனைப் பொருட்படுத்தாதே. உள்ளே போ.
அதோ அங்கே தொலைவில் மேஜைக்கு முன்னால் பைல்களை பார்த்துக் கொண்டிருக்கும் மீசைக்கார பெரியவர்தான் போலீ¦ஸ் இன்ஸ்பெக்டராக இருக்க வேண்டும். தோற்றத்தைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் பார்ப்பதற்கு சினிமா வில்லன் போல் இருக்கிறார். ஆன்மாவுக்கும், யோசனைகளுக்கும் குறியீடு இல்லை. கிணற்றிலிருந்து வெளியே வந்து குழியில் விழப் போகிறோம் என்று சந்தேகமா?
திரும்பவும் நின்று விட்டாயே.
“என்ன வேண்டும் அம்மா?”
உன்னைத்தான்! அந்த மீசைக்காரார் கூப்பிடுகிறார். தைரியமாக போய் விஷயத்தைச் சொல். உன் தோற்றத்தைப் பார்த்தால் எப்படியும் அவருக்கு சந்தேகம் வராமல் போகாது. ஏதோ ஒரு இடத்தில் தொடங்கித்தானே ஆக வேண்டும். பயம் அனாவசியம். உனக்கு நேர்ந்ததைப் பற்றி சொல்லிவிடு.
“பெண்ணே! பார்ப்பதற்கு படித்தப் பெண்போல் தென்படுகிறாய். எங்கே வேலை பார்க்கிறாய்? சாப்ட்வேர் கம்பெனியா?”
பரவாயில்லை. இதற்கு சட்டென்று பதில் சொல்லிவிட்டாய். இப்பொழுதாவது வந்த விஷயத்தைச் சொல். நான் சொல்லும் வார்த்தைகளை பொருட்படுத்தாமேலேயே தொடங்கி விட்டாயே.
போகட்டும். தடுமாறினாலும் விஷயத்தை மெதுவாக சொல்லி முடித்து விட்டாய். அந்த மீசைக்காரர் உன்னையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். உன் தோற்றத்தைப் பார்த்தால் நம்பிக்கை வரவில்லை போலும்.
“இதோ பாரம்மா. எதுவாக இருந்தாலும் நீங்கள் ரிபோர்ட் செய்தால் அதன்படி நாங்கள் நடவடிக்கை எடுப்போம். முதலில் இந்த விண்ணப்பத்தை நிறைவு செய்துகொடுங்கள். கான்ஸ்டபிள்! புகாருக்கு உண்டான பாரத்தைக் கொண்டுவா.”
இவை எல்லாம் காவல் நிலையத்திற்கே உரிய சம்பிரதாயங்கள். முடித்து விடு. அதோ கான்ஸ்டபிள் பாரத்தை கொண்டு வருகிறான். பெற்றுக்கொள். அதை எழுதும் முன் ஒரு தடவை யோசித்துப் பார். எது எப்படி வந்தாலும் தைரியமாக எதிர்த்து நிற்க வேண்டும். அவை அவமானங்களாக இருக்கலாம். அவதூறுகளாகவும் இருக்கலாம். மேலும் ஆட்சேபணைகளும் வரக்கூடும்.
“உங்க அப்பாஎன்ன செய்கிறார்?”
அந்த மீசைக்காரார் உன்னைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறார். நிமிர்ந்து பார். உன்னுடைய அப்பா கல்லூரியில் பேராCKய௱ என்று மொட்டையாக சொல்லாமல் எந்த கல்லூரியில் என்பதையும் சேர்த்து சொல். இல்லை என்றால் உன் பதிலுக்கு வால்போல் இன்னொரு கேள்வி முளைக்கும்.
என்னவோ நினைத்தேன். ரொம்ப புத்திசாலியாய் எல்லாம் சொல்லிக் கொண்டு வருகிறாய். பரவாயில்லை. கொஞ்சம் தைரியம் வந்து விட்டது போலும்.
“உன் தைரியத்தை பாராட்டுக்கிறேன் பெண்ணே! கட்டாயம் உனக்கு நியாயம் நடக்கும்படியாக பார்க்கிறேன். உன்னிடம் ஏதாவது ஆதாரங்கள் இருக்கிறதா? போட்டோகள், செல்போன் ரிக்கார்ட்ஸ் ஏதாவது. அவை இருந்தால் இந்த கேசுக்கு பலம்கூடும்.”
உன்னிடம் என்ன ஆதாரங்கள் இருக்கிறது? எதுவுமே இல்லை, உடலில் இருக்கும் காயங்களைத் தவிர.
திரும்பவும் மௌனம். அதனைத் தொடர்ந்து அழுகை. அழுதால் தீர்வு கிடைத்து விடுமா? தண்டனை கொடுத்து விடுவார்களா? சொல்! நடந்ததை எல்லாம் விவரமாகச் சொல்.
எல்லாம் ஒன்று விடாமல் சொல்லிக் கொண்டு வருகிறாய். வெரி குட்!
“உன்னிடம் இருக்கும் இந்த ஆதாரங்கள் போதும். ஆனால் அவற்றை நாம் இப்பொழுதே பத்திரமாக பாதுகாக்க வேண்டும். என்னுடன் வா. எனக்குத் தெரிந்த ஜ௫x ஒருவர் இருக்கிறார். அவரிடம் உன்னுடைய வாக்குமூலத்தை நீ சொல்லலாம். தினமும் நாளேட்டில் எத்தனையோ படித்து வருகிறோம். குறைந்த பட்சம் இந்த கேஸையாவது திட்டவட்டமாக நிரூபிக்க முடிந்தால் நியாயம் கிடைக்கக் கூடும்.”
மீசைக்காரர் நாற்காலியை விட்டு எழுAறா௱. ஒருக்கால் உன்னை ஜட்ஜ் அய்யாவிடம் அழைத்துச் செல்வாரோ. இப்பொழுதே இரவு மணி ஏழரை ஆகி விட்டது. நீ ஜட்ஜிடம் சென்று விவரமாகச சொல்லி முடிப்பதற்குள் மேலும் இரண்டு மூன்று மணி நேரம் ஆகி விடும். வீட்டில் அம்மா, அப்பா பதட்டப்பட மாட்டார்களா? செல்லை வேறு அணைத்து விட்டாய். இல்லை என்றால் இதுவரையில் நீ பேசிய வார்த்தைகளுக்கு பின்னணி இசையாக அதுவும் ஒலித்துக் கொண்டிருக்கும். சரி சரி, உன் மனதிற்கு உகந்தது போல் செய்.
என்னவோ நினைத்தேன். ஜட்ஜ்தானே, அவரை அப்புறமாக சந்திக்கலாமா என்று கேட்டாயே? கெட்டிக்காரிதான். எனக்கு இந்த விஷயம் தோன்றவே இல்லை பார்த்தாயா?
“பாரம்மா. நீ சொன்னதை வைத்துகொண்டு பார்த்தால் இந்த சம்பவம் நடந்து மூன்று மணிநேரம் ஆகி இருக்கலாம். இவை எல்லாம் கேஸை பலப்படுத்தும். முக்கியமாக ஜட்ஜை சந்தித்து அவருடைய அறிவுரையையும் பெற்றுக் கொள்வோம். பயப்பட வேண்டியதில்லை. அந்த ஜட்ஜ் வீடு பக்கத்தில் தான் இருக்கிறது.”
உன் முகத்தில் வெளிப்படையாக தென்பட்டுக் கொண்டிருந்த பயத்தை அந்த காவல் அதிகாரி எளிதாகவே உணர்ந்து விட்டார். பார்ப்பதற்கு பெரிய மனிதன்போல் இருக்கிறார். பயம் ஏன்? போ… உனக்கு வேண்டியது அந்த மூவருக்கும் தண்டனை கிடைக்கும்¢¢படி செய்யவேண்டும். அதுதானே?
கொஞ்சம்கூட யோசிக்காமல் அவருடைய ஜீப்பில் ஏறி உட்கார்ந்து விட்டாயே?
இந்த அளவுக்காவது தைரியம் இருக்க வேண்டும். போகப்போக நீ எதிர்கொள்ள வேண்டிய பல விஷயங்களை, வெளியில் சொல்லாவிட்டாலும் ஒரு எரிமலைக் குழம்பாய் உன்னை தகித்துக்கொண்டிருக்கிறது என்று தெரியும்.
கட்டு மீறிய உன் கோபம் குரோதமாக மாறி விட்டதும் தெரியும். இதையெல்லாம் சமாளித்து, தைரியமாக நீ முன்னோக்கி செல்கிறாய் பார்த்தாயா? அதைப் பாராட்டத்தான் வேண்டும்.
தப்பித் தவறி இந்த காவல் அதிகாரி கூட முறை தவறி நடந்து கொண்டுவிட்டால்? ஆபத்தில் இருக்கும்போது சந்தேகங்கள் அதிகமாக இருக்குமோ? எப்படியும் ஜீப்பில் ஏறிவிட்டாய். இனி சந்தேகப்படுவதில் எந்தப் பயனும் இல்லை.
பார்த்துக் கொண்டிருந்தபோதே ஜட்ஜ் வீடு வந்து விட்டது. வெளியிலிருந்து பார்க்கும் போதுபெரிய பங்களாவாகத்தான் இருந்தது.
“பாரம்மா. ஜட்ஜ் அய்யாவிடம் எல்லாம் விவரமாக, தைரியமாக சொல். நான் உன்னிடம் ஆழமாக எந்த விவரங்களையும் கேட்கவில்லை. நீ நிரப்பிக் கொடுத்த பாரங்கள் என்னிடம்தான் இருகிறது. அவர்களுடன் உனக்கு இருந்த அறிமுகம், நடந்த சம்பவம், அந்த பையனின், அவன் பெற்றோரின் விவரங்கள், அவனுடன் இருந்த மேலும் இருவரைப் பற்றியும் சொல். ஜட்ஜ் அய்யா எனக்கு நல்ல நண்பர். இதுபோன்ற கேசுகளை நிறைய பார்த்திருக்கிறார். உனக்கு நியாயம் கிடைக்கும்படி செய்யும் பொறுப்பு எங்களுடையது.”
திரும்பவும் யோசனையில் ஆழ்ந்து விட்டாயே? பெரிய மனிதர் சொன்னதைக் கேட்டுக்கொண்டாய் அல்லவா. மௌனமாக தலை அசைத்து விட்டால் மட்டும் போதாது. உள்ளே சென்ற பிறகு எல்லாம் விவரமாக சொல். அந்த போக்கிரி பயல்களை பழி வாங்க வேண்டும் என்றால் உனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்ல வேண்டும். அறிமுகங்கள், நட்புகள், காதல்கள், பேச்சு வார்த்தைகள், ஆவேசங்கள், ஆக்ரோஷங்கள் வகைரா வகைரா. இத்தனை தூரம் வந்து விட்ட பிறகு அந்த போக்கிரிகளுக்கு பாடம் கற்பித்துதான் ஆக வேண்டும்.
பார்த்தாயா! உன் மௌனத்தை காவல் அதிகாரி புரிந்துகொண்டு விட்டார் போலும். உள்ளே போ. போலீ¦ஸ் அதிகாரியைப் பார்த்ததும் வேலைக்காரன் போல் இருந்தவன் உள்ளே ஓடினான். சினிமாவில் கதாநாயகனின் தாய் போன்று இருந்த அந்த அம்மாள் ஜட்ஜின் மனைவியாக இருக்க வேண்டும்.
“வாங்க அண்ணே! உட்காருங்கள். அவர் குளித்துக் கொண்டு இரு௧Aறா௱. சாப்பிட்டுவிட்டுப் போகலாம் இருங்கள்” என்று சொல்லிக்கொண்டே, யார் இந்த பெண் என்று உன்னை பார்த்துக் கொண்டிருந்தாள்.
பதட்டமடையாதே. புதியமனிதர்களை பார்க்கும் போது கேள்விக் குறிகள், சந்தேகம் நிறைந்த பார்வைகள் எல்லாம் சகஜம்தான்.
“அவருடன் சின்ன வேலையாய் வந்தேன். நேரம் அதிகம் இல்லை. சாப்பாடு எல்லாம் வேண்டாம். இந்தப் பெண்ணுக்கு சிறிய உதவி வேண்டும் என்பதால்..”
அந்தம்மாள் உன்னை ஏறயிறங்க பார்க்கிறாள். நீ தலைகுனிந்து நிற்பானேன்? உன் தோற்றம் எப்படி இருக்கிறது என்று உனக்கு தெரியாது. துக்கம் பொங்கி வந்து கொண்டு இருந்தாலும் வலுக்கட்டயமாக விழுங்கிக் கொண்டு இருக்கிறாய் என்று தெரியும். இது போன்ற நேரத்தில் தைரியமாக இருப்பதுடன் அழுகையைக் கட்டுப் படுத்துவதும் நல்லது.
நின்று கொண்டு இருப்பானேன்? அந்தப் பெரிய மனிதர் உன்னை உட்காரச் சொல்லி ஜாடை கா‡H௧Aறா௱. உன் உடலும், மனமும் கலங்கி இருப்பது தெரியும். இந்த நேரத்தில் இதைவிட யாராலும் எதுவும் செய்துவிட முடியாது. நீ கொஞ்சம் படித்திருப்பவள் என்பதால் துணிச்சலுடன் இர‡டடிகœ எடுத்து வைத்திருக்கிறாய். இதுபோன்ற கொடுமைகள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் வெளிச்சத்திற்கு வருபவை மிகவும் குறைவு.
‘என்னடா? இந்த இரவு நேரத்தில் வந்திருக்கிறாய்?’ தலையைத் துவட்டிக்கொண்டே வந்தவர் ஜட்ஜ் ஆக இருக்க வேண்டும்.
பெரியவருக்கு வணக்கம் சொல்..
அவர் உன்னை ஆழமாக பார்க்கிறார்.
“இந்தப் பெண்ணுக்கு பெரிய கஷ்டம் வந்து விட்டது. உங்கள் உதவியை பெற்றுக் கொள்வோம் என்று அழைத்து வந்தேன்.”
பார். அந்த போலீஸ்காரர் உன்னைப் பற்றி அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இல்லாமலேயே சுருக்கமாய் சொல்லி விட்டார்.
ஜட்ஜ் உன் பெயரைக் கேட்கிறார். அதையாவது சொல்..
உன் தோற்றத்தைப் பார்த்தே ஜட்ஜுக்கு புரிந்து விட்டது போலும். என்ன நடந்தது என்று கேட்கிறார். நீ அழுதுகொண்டே சொல்லும் தேவை இல்லாமல் அந்த போலீ¦ஸ் அதிகாரியே எல்லாம் விவரமாக சொல்லி உன்னைக் காப்பற்றி விட்டார்.
“எப்போது நடந்தது. நீ கேஸ் பதிவு செய்துகொண்டு, அந்த போக்கிரிகளை அரெஸ்ட் செய்து விட்டாயா?”
நூற்றுக்கணக்கான கேஸ்களைப் பார்த்திருக்கும் ஜட்ஜ் நம்மைப் போலவே யோசிக்கிறார் போலும். அவருடைய தோரணையைப் பார்த்தால் உனக்கு நியாயம் கிடைக்கும் போல்தான் இருக்கிறது.
“இன்னும் இல்லை. ஒவ்வொரு தடவையும் நாம் அவசரப்பட்டு, கேஸ் பதிவு செய்துவிட்டு அரெஸ்ட் பண்ணுவோம். அவர்கள் எந்த அமைச்சரின் சிபாரிசிலேயோ தப்பித்துக்கொண்டு விடுவார்கள். இந்தமுறை கொஞ்சம் ஸ்ட்ராங் ஆக கேஸ் பதிவு செய்வோம் என்றுதான்.”
“நன்றாகத்தான் இருக்கு. நீ சொன்ன விவரங்களைப் பார்த்தால் அதில் ஒருத்தன் எம்.பி. யின் மகன். அது போகட்டும் பெண்ணே! உனக்கு அவர்களைப் பற்றி முன்பே தெரியாதா? அந்த எம்.பி.யின் மகன் உனக்கு எப்படி அறிமுகம்? வகுப்புத் தோழனா?”
நீ மௌனத்தை விட்டுவிட்டு எல்லாவற்றையும் சொல்.. நீ விவரமாகச் சொன்னால்தான் அவர்களுக்கு ஒரு தௌ¤வு பிறக்கும். சக ஊழிய நண்பன், அந்த எம்.பி.யின் மகனை எந்த இடத்தில் சந்தித்து… அந்த போக்கிரிகள்… வேண்டாம்… நடுவில் நான் எதற்கு? நீயே விவரமாகச் சொல்லு.
நடந்ததை எல்லாம் விவரமாகச் சொல்லியிவிட்டாய். இது போன்ற சமயத்தில் இந்த அளவுக்காவது வாய் விட்டு சொன்னது ஆச்சரியமாக இருக்கிறது.
“சம்பவம் நடந்து நான்கைந்து மணி நேரம்தான் ஆகி இருக்கிறது. அவர்களைப் பற்றிய ஆதாரங்கள், அதாவது பாரென்சிக் எவிடென்ஸ் வேண்டும். அந்த உடைகள்…”
பாவம் ஜட்ஜ் கொஞ்சம் சங்கடப் படுகிறார் போலும். நீ காவல் நிலையத்திலிருந்து நேராக நியாதேவதையின் சந்நிதிக்கு வந்திருக்கிறாய். ஆதாரங்கள் ஏதாவது இருந்தால் அவை நீ போட்டிருக்கும் உடைகள்தான். அதையே சொல்.
நீ சொன்னதைக் கேட்டுவிட்டு ஜட்ஜ் மனைவியை அழைத்து மெதுவாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அந்த அம்மாள் உள்ளே சென்றாள். ஒருக்கால் கேமேராவை எடுத்து வந்து போட்டோ எடுப்பாளோ என்னவோ.
“அப்படியானால் டாக்டரிடம் அழைத்துச் சென்று பாரென்சிக் டெஸ்ட் பண்ண வைத்து….”
இந்த போலீ¦ஸ் அதிகாரி ரொம்பவும் அப்பாவிப் பிராணியாக இருக்கிறார். நீவந்து புகார் சொன்ன உடன் போய் அந்த போக்கிரிகளை அரெஸ்ட் பண்ணாமல் இந்த ஜட்ஜிடம் அழைத்து வந்த போதே அவர் எவ்வளவு புத்திசாலி என்று தெரிகிறது. அந்த அம்மாள் வந்தாள். கையில் ஏதோ பாக்கெட் இருந்தது.
“இதோ பாரும்மா. இந்த உடைகளை எடுத்துக்கொள். இந்த சம்பவத்திற்கு சம்பத்தப்பட்ட ஆதாரங்கள் உன் உடைகளில் இருக்க வாய்ப்பு இருக்கிறது. நீ இந்த உடைகளை… பயப்பட வேண்டியது இல்லை. இது எங்கள் மகளுக்காக வாங்கிய புது உடைகள்.” ஜட்ஜ் தயங்கிக் கொண்டே சங்கடத்துடன் வார்த்தைகள் விழுங்கியபடி சொல்கிறார்.
வேறு வழி இல்லை. முன்பின் யோசிக்காமல் போய் உடைகளை மாற்றிக்கொண்டு புது ஆடைகளை அணிந்து கொள். சட்டென்று எழுந்துகொண்டு புத்தாடைகளை வாங்கிக்கொண்டு விட்டாயே. வெரிகுட்!
உன்னுடைய பழைய ஆடைகளை அந்த அம்மாள் ஒரு பிளாஸ்டிக் பையில் பத்திரப்படுத்தி வைத்திருப்பாள் போலும்.
இந்த புது ஆடைகள் உனக்கு மிகவும் பொருத்தமாக இருப்பது வியப்புதான்.
போகப்போக இது போன்ற பல ஆச்சரியங்கள் உன்னை மேலும் வியப்படைய வைக்கக் கூடும்.
வாழ்க்கையே வியப்புகளின் வளையம் அல்லவா?
“நீ அனாவசியமாக பதட்டம் அடைந்து பத்து பேரிடம் இந்த விஷயத்தை சொல்லி விடாதே. நாளை காலையிலேயே பாரென்சிக் லாபிற்கு அனுப்பி வைத்து கேஸை மேலும் கட்டுதிட்டப் படுத்துவோம். உன் தைரியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதற்காக, கண்மூடித்தனமாக அவர்களை நம்பிய உன் அப்பாவித்தனத்தைப் பார்த்து இரக்கப் படாமலும் இருக்க முடியவில்லை. இதில் உன் தவறு எதுவும் இல்லை. இது போன்றவை ஆதி காலத்திலிருந்து நடந்து வருகின்றன. இதற்கு முன்னாலும் நடந்திருக்கிறது. ஆனால் வெளியில் தெரிந்திருக்காது. வெளியில் சொல்ல முடியாமல் எத்தனையோ பேரின் வாழ்க்கை நாசமாகி விட்டது. சிலர் வெளிப்படுத்த மாட்டார்கள். உனக்கு இருந்த தைரியம் அவர்களுக்கு இருக்கவில்லை. அப்போது இருந்த கட்டுப்பாடுகள் அப்படித்தான் இருந்து வந்தன. நீ படித்தவள். வயதில் பெரியவனாய் உனக்கு ஒரு அறிவுரை சொல்லலாமா?”
அவர் உன்னிடம்தான் கேட்கிறார். அப்படி குழப்பமாக பார்க்காமல் ஏதோ ஒரு பதில் சொல்.
“நாம் எவ்வளவு ஸ்ட்ராங் ஆக கேஸ் போட்டாலும் உனக்கு நியாயம் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. கோர்ட்டில் நாளுக்கு நூற்றுக்கணக்கான கேசுகள் பதிவு ஆகும். எல்லாவற்றையும் விசாரித்து தீர்ப்பு வழங்கும்போது பல ஆண்டுகள் கழிந்து விடும். பணத்தால் லாயர்களை, அதிகாரிகளை விலைக்கு வாங்கி விடுவார்கள். அவர்களும் பணத்திற்கு ஆசைப்பட்டு தவறான தகவல்கள் சொல்லி விடுவார்கள். தவறு செய்தவர்கள் ஜம்மென்று இருப்பார்கள். இதற்குள் உன் கேஸைப் பற்றி மீடியாக்காரர்களுக்கு தெரிந்து விடும். பேப்பர்காரர்கள், டி.வி.காரர்கள் உன்னை வாழ விடமாட்டார்கள். உன்னைச் சுற்றிலும் இருப்பவர்கள் உன்னை விட்டு வைக்க மாட்டார்கள். உனக்கு ஏற்பட்ட காயத்தை விட இவர்கள் பண்ணும் காயம் ஒவ்வொரு நொடியும் உன்னைக் கொன்று கொண்டே இருக்கும். உன்னை மட்டுமே இல்லை. உன்னைச் சேர்ந்தவர்களையும் சக்கையாக பிழிந்து விடும். என் பேச்சைக் கேள். நீ படித்திருக்கிறாய். நடந்ததை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விடு. நிம்மதியாக வேலை பார். சமர்த்தாக கல்யாணம் பண்ணிக்கொள். இது நடந்தது அவர்களுக்கும் எங்கள் இருவருக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. நீ எதுவும் நடக்காதது போலவே வீட்டுக்குப் போ. உன் வீட்டாரிடம் சொல்லவேண்டும் என்று நினைத்தால் சொல். அது உன் விருப்பம். இந்த சமுதாயம் பொய்யை விரும்பும் அளவுக்கு உண்மையைப் பொருட்படுத்தாது. என் மகளாக இருந்தால் இப்படித்தான் சொல்லுவேன். இவர் இப்படிச் சொல்கிறாரே என்று நினைக்காதே. வீட்டிற்குப்போன பிறகு யோசித்துப் பார். கேஸ் போடவேண்டும் என்று முடிவு செய்தால் காலையில் வா. என் நண்பன் கேஸை தொடருவான். எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன்.”
இந்தப் பெரியவர் என்ன? நீதி போதனை செய்கிறார்.
“மௌனமாக பிரச்னையிலிருந்து விலகுவதால், அவர்கள் இன்னொரு பெண்ணுக்கு இதே போன்ற நிலைமையை ஏற்படுத்தக் கூடும். கொடுமைகளைச் செய்வது வழக்கமாகி விடக்கூடாது இல்லையா?” என்று கன்னத்தில் அறைவதுபோல் பெரியவரைக் கேட்டு விட்டாயே. என்னமோ நினைத்தேன். கெட்டிக்காரிதான்.
“நீ தைரியமாக நிலைத்து நிற்பதாக இருந்தால் கேஸ் போடலாம். அதற்கு நீயும், உன் வீட்டாரும் தயார் நிலையில் இருந்தால்தான். நம்மைச் சுற்றிலும் இருப்பவர்கள் இர௧க‹ காட்டுவார்கள். ஆனால் துணைக்கு வர மாட்டார்கள். ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் இது ஒரு தனி ஒருத்தியின் போராட்டம். என்னால் செய்ய முடிந்ததை கட்டாயம் செய்கிறேன். அனுபவம் வேண்டாம் என்கிறது. மனம் போராடச் சொல்கிறது. சட்டங்கள் மாற வேண்டும். அவற்றை உருவாக்கும் மனிதர்கள் மாற வேண்டும். இந்த பிரச்சனை ஒரு ஊசலாட்டம், அவ்வளவுதான்!” சொல்லும்போதே அவருடைய கண்களில் நீர் சுழன்றது. ஆச்சரியமாக இருக்கு இல்லையா? அனுபவத்திலிருந்து வெளிவந்த வார்த்தைகள் அவை. உனக்கு அவர்கள் மீது கோபம், பகை, பழி உணர்வு. இப்படி எல்லாம் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன.
சாப்பிட்டு விட்டுப் போகச்சொல்லி சொன்னபோதிலும் அந்த காவல் அதிகாரி வேண்டாம் என்று தடுத்து விட்டு உன்னைக் காப்பாற்றி விட்டார். ஏற்கனவே தாமதம் ஆகி விட்டது.
உன்னுடைய அம்மா, அப்பா உனக்காக கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். நீ கைபேசியையும் அணைத்து விட்டாய். ஏற்கனவே உன் அப்பாவுக்கு பயம் அதிகம்.
“இந்தப் பெண்ணை அவள் வீட்டில் இறக்கி விடுகிறாயா?” என்று ஜட்ஜ் கேட்பதற்கு முன் போலீ¦ஸ் அதிகாரி தலையை அசைத்து விட்டார்.
வீடு வரையிலும் துணைக்கு வந்தது போலீ¦ஸ் அதிகாரி என்றால் உன் அப்பாவுக்கு சந்தேகம் வராதா? ஆனால் வேறு வழி இல்லை.
கிளம்பு. போலீ¦ஸ் ஜீப்பில் ஏறிக்கொள். அவருக்கு வீட்டு முகவரி சொன்னாயா? நீ நாளை வரையிலும் காத்திருக்க வேண்டியதுதான். வேறு வழி இல்லை. போலீ¦ஸ் அதிகாரி ஏதோ சொல்கிறார். கேட்டுக் கொள்.
“ஜட்ஜ் அய்யா சொன்னது கேட்டாய் இல்லையா? அவர் ரொம்ப பிராக்டிகல் மனிதர்.”
என்ன பதில் சொல்லப் போகிறாய் நீ? உனக்கு அந்த கயவர்களைப் பழி வாங்கவேண்டும், புத்தி புகட்ட வேண்டும் என்று இருக்கிறது. இவர்கள் என்னடாவென்றால்…
பார்த்துக் கொண்டிருக்கும்போதே வீடு வந்து விட்டது. போலீ¦ஸ் அதிகாரிக்கு தெருக்கள் எல்லாம் நன்றாகவே தெரியும்போல் இருக்கிறது. சரியாக வீட்டிற்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தி விட்டார். நான்தான் சொன்னேன் இல்லையா, உன் அம்மாவுக்கு பதட்டம் அதிகம் என்று! வீட்டின் முன்னால் போலீ¦ஸ் ஜீப் வந்து நின்றதும் சட்டென்று கேட் அருகில் வந்து விட்டாள். போலீ¦ஸ் அதிகாரியைப் பார்த்ததும் ஒரே பதட்டம்! வியர்த்து கொட்டிவிட்டது அவளுக்கு,
“உங்க மகளும், என் மகளும் சினேகிதிகள்! இன்றைக்கு எங்கள் வீட்டில் பார்ட்டி இருந்தது. தாமதம் ஆகி விட்டதால் தனியாக அனுப்புவானேன் என்று நான்தான் கொண்டு விட வந்தேன்.”
அந்த போலீ¦ஸ் அதிகாரி உன் வயிற்றில் பாலை வார்த்தார். அவருக்கு நன்றி சொல். உன் தாய் அவருடைய பேச்சு, தோரணை எல்லாம் பார்த்து நம்பி விட்டாள் போலும். உள்ளே வந்து காபி குடிக்கச் சொல்லி உபசாரம் செய்கிறாள்.
உன் அம்மா திடீரென்று உன்னை குழப்பமாக பார்க்கிறாளே, ஏன்? நீ அணிந்து கொண்டிருக்கும் புது ஆடைகளைக் கவனித்து விட்டாள் போலும். மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக கேட்டும் விட்டாள். திறந்த வாய்மூடாமல் அப்படி பார்த்துக் கொண்டு இருக்கிறாயே? எதாவது சொல்.
“இது என் மகளின் டிரெஸ். உங்கள் மகள் எங்கள் வீட்டு அருகில் சேற்றுக் குழியில் தவறுதலாக சறுக்கி விழுந்துவிட்டாள். தேவைப்பட்டால் நாளை தோய்க்க வைத்து என் மகள் கொண்டு வந்து தருவாள். உள்ளே அழைத்துப்போய் நன்றாக குளிக்கச் சொல்லுங்கள். பன்றிகள் புரண்டு கொண்டிருந்த சேற்றுக்குழி அது. உடல் நலத்திற்கு கேடு,” என்று சொல்லிவிட்டு அவர் வேகமாய் ஜீப்பில் ஏறிக்கொண்டு விட்டார். உன்னுடைய வணக்கத்தையோ நன்றியையோ அவர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
உன்னைப் பாராட்டாமல் என்னால் இருக்க முடியவில்லை. “நீங்களும், நானும் சேர்ந்து நாளைக் காலையில் பன்றிகளை துரத்தி அடிக்கலாம் சார்” என்று ஆவேசமாக சொன்ன வரையில் சரிதான்.
அந்த ஜட்ஜ் பெரியவர் சொன்னதை கேட்பாயா? அல்லது நீ தைரியமாக நிலைத்து நிற்பாயா?
இன்று இரவு எப்படியும் தூக்கம் வரப் போவதில்லை உனக்கு. உன் முடிவு உனக்காகவா? அல்லது எல்லோருக்குமா? நிதானமாக யோசித்துப் பார்.
எப்போது விடியப் போகிறது என்று உனக்கு மட்டுமே இல்லை. சூKயனு௧கு‹ தவிப்பா இருக்கிறது. நாளைக் காலையில் பார்ப்போம்!
ஜெ.பாஸ்கரன்/ இலவசம்தானே! – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “காத்திருக்கும் சூரியன்/தெலுங்கில்: சாயி பிரம்மானந்தம் கொர்த்தி”
Comments are closed.