
மந்திர தந்திரம் வேண்டாம்
ஆடம்பர மாளிகை வேண்டாம்
சொற் புகழ்ச்சி வேண்டாம்
வேடிக்கை காட்டும்
வித்தைகள் வேண்டாம்
எதிர்பார்க்கும் மனம் வேண்டாம்
தன்னலம் கருதும் தோழமை வேண்டாம்
தன்னடக்கம் இலா பண்பு வேண்டாம்
அன்பில்லா உறவு வேண்டாம்
என்றும் இயல்பாய் இருக்கும்
பண்பதனை எப்போது
எனக்களிப்பாய்
பரந்தாமா ?
12/10/2024
