
“தாயைப் பார்த்து
பெண்ணையெடு”
என்பது ஓர்
பழமொழி.
“தவறது
தந்தையைப் பார்த்து
பெண்ணையெடு”
என்கிறான் ஓர்
அநுபவசாலி.
எது சரி?
எது தவறு?
என்று தெரிய
எடுத்தோரை
அடுத்துக் கேட்டால்
ஏதேதோ
உளறுகிறார்!
அறியும் வழி
அதுவன்றி
பிறிதொன்று
இல்லையே !
பின் என் செய்ய?
தாயைப் பார்த்தொன்று
தந்தையைப் பார்த்தொன்று
என இரண்டு கொள்ளவா?
