
காதல் பிறந்து
கண் அடைய
ஓடிப்போய்
நான் அவளை
கைப் பிடித்தேன்.
காலிட்டடிக்க
ஞானம் பிறந்து
கண் திறக்க
நான் அவளை
கைவிட்டு
ஓடிப் போயிட
தலையிட்டுடைத்தேன்.
திறந்த கண்
திரும்பவுமடைய
என்ன பிறந்தது
என்று நான் பார்க்க,
கண்ணடைத்துக்
கண் திறந்த
இடை வேளையிற்
பிறந்த இரு
கண்களே காரணம்
எனக் கண்டேன்.
