ஷண்முக சுப்பையா/செருப்பு

அழகான அளவான
செருப்பென்றால்
அது கடிக்கத்தான் செய்யும்
கடித்துக் கடித்துக்
கடித்த இடமெல்லாம்
காய்த்திட ஒருநாள்
கடிப்பின் கடுமை
தெரியாதாகும்.
அதுவரைக்கும்
பொறுக்கும் பொறுமை
உனக்கிலதாயின்
பஞ்சுத் தோலால்
பதப்படுத்திய
செருப்பணிந்து
நடந்திட வேண்டியதே.
அதற்குனக்கு
போக்கில்லையெனில்
பழம் செருப்புநாடி
சென்றிடுவாயே.