
கண்ணே நீ
கண்ணாடிமுன் நின்று
காலத்தை ஏன்
வீணாக்குகின்றாய்.
நித்தம் நிதம்
நீ நின்
நெற்றிக்கிட்ட
பொட்டா
கண்ணுக்குத் தீட்டிய
மையா
உதட்டிற்குப் பூசிய
சாயமா
முகத்திற்குத் தடவிய
தூளா
இல்லை
இதுபோன்ற
இன்ன பிறவா
என்னை இச்சிறு
கால அளவில்
(அறுதியிட்டுக் கூறினால்
அரைக்கால்
நூற்றாண்டில்)
கால் குசேலனாக்கியவை?
இல்லையென்றுனக்கு
நன்றாய்த் தெரியுமே
பின் எதற்கு
என் கண்ணே நீ
கண்ணாடிமுன் நின்று
காலத்தை ஏன்
வீணாக்குகின்றாய்.
