ஷண்முக சுப்பையா/தாளம்

மாமியார் தாளத்திற்கு
மாமனார்
ஆடுவாரேல்
நீ உன்
மனைவியார்
தாளத்திற்கு
மரியாதையாய்
ஆடிடுவாய்.
ஆடாவிட்டால்
மாமியாரும்
மனைவியாரும்
தெருவில் நின்று
ஆடுவார்
நீ தாளம்
போடுவாய்.